போட்டித்தேர்வு தொடர் 13: குரூப் 2 தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு..

By செய்திப்பிரிவு

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி.- 13 -

தமிழகத்தில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட பல்வேறு பதவிகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் 4,012 தேர்வு மையங்களில் இன்று நடக்கிறது. மொத்தம் 11.78 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுதுகின்றனர். கொள்குறி வினாத்தாள் முறையில் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வுக்கான முக்கிய குறிப்புகள்:

1. கருப்பு நிற மை பால் பாயின்ட் (Black Colour Ink Ball Point Pen) பேனாவை மட்டும் பயன்படுத்தவும்.

2. தேர்வர்கள் தேர்வு வளாகத்தில் காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும்.

3. OMR விடைத்தாள் காலை 9 மணிக்கு வழங்கப்படும்.

4. தேர்வர்கள் காலை 9 மணி முதல் மதியம் 12.45 மணி வரை தேர்வு அறையில் இருந்து வெளியேற அனுமதி இல்லை.

5. தேர்வர்கள் ஹால்டிக்கெட் உடன் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் (PAN) கார்டு, வாக்காள அடையாள அட்டை (Voter ID) போன்ற அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் நகல் (Xerox/ Photocopy), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport Size Photo) எடுத்துச் செல்ல வேண்டும்.

6. ஹால்டிக்கெட்டில் அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இட்டுள்ளாரா என தேர்வர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

7. தேர்வர்கள் OMR விடைத்தாளில் 2 இடங்களில் கையொப்பமிட வேண்டும்

8. தேர்வு முடிந்த பிறகு, OMRவிடைத்தாளில் தரப்பட்டுள்ள பெட்டியில் தேர்வர்கள் தங்கள் இடதுகை கட்டைவிரல் ரேகையை பதிவிட வேண்டும்.

9. தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வினாத்தாள் கையேடு வழங்கப்படும்.

10. OMR விடைத்தாளில் வினாத்தாள் கையேடு எண்ணை எழுதுவதற்கு முன்பு, அனைத்து கேள்விகளும் விடுபடாமல் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை தேர்வர்கள்/ விண்ணப்பதாரர்கள் சரிபார்க்க வேண்டும்.

11. வினாத்தாள் கையேட்டில் குறைபாடு இருந்தால், உடனே அறைகண்காணிப்பாளருக்கு தெரிவிக்க வேண்டும். உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்வருக்கு மாற்று வினாத்தாள் கையேடு வழங்கப்படும்

12. தேர்வு தொடங்கிய பிறகு வினாத்தாள் கையேடு, OMR விடைத்தாளில் குறைபாட்டை கண்டறிந்து கூறினால், மாற்றித் தரப்படாது.

13. OMR விடைத்தாளின் பக்கம் 2-ல் விளக்கப்பட்டுள்ளபடி, அனைத்து பதில் குமிழ்களும் (Answer Bubbles) சரியாக நிழலிடப்பட (Shading) வேண்டும்.

14. தேர்வருக்கு பதில் தெரியாவிட்டால் [E]-ல் நிழலிட (Shading) வேண்டும்.

15. பயன்படுத்திய பிறகு, OMR விடைத்தாள் மாற்றப்படாது.

16. விடைகளாக வடிவமைக்கப்பட்ட [A]s, [B]s, [C]s, [D]s, [E]sகளின் மொத்த எண்ணிக்கை பெட்டிகளில் எழுதப்பட வேண்டும். தொடர்புடைய குமிழிகள் OMR விடைத்தாள் பகுதி II-ன்பிரிவு III-ல் தேர்வர்களால் நிழலிடப்பட வேண்டும்.

17. [A]s [B]s [C]s [D]s [E]s நிழலிடப்பட்ட மொத்த எண்ணிக்கை, வினாத்தாளில் அச்சிடப்பட்ட மொத்த கேள்விகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்க வேண்டும்.

18. முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் முகக் கவசம் அணிந்தால் மட்டுமே தேர்வு நடைபெறும் இடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

19. தேர்வறைக்குள் தேர்வர்கள் முழு நேரமும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். எனினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறினால், தேவைப்படும்போது அடையாளத்தை சரிபார்ப்பதற்காக தேர்வர் தனது முகக் கவசத்தை அகற்ற வேண்டும்.

(அடுத்த பகுதி நாளை வரும்)

மதிப்பெண் கழிக்கப்படும்.. கவனம் தேவை!

1. பதிவு எண்ணை தவறாக எழுதினால் இரண்டு மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

2. OMR விடைத்தாளில் உள்ள விடைகளின் நிழல் எண்ணிக்கைக்கும், [A]s, [B]s, [C]s, [D]s, [E]s ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கைக்கும் இடையே வேறுபாடு காணப்பட்டால், பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களில் இருந்து இரண்டு மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

3. கேள்வித் தாள் கையேடு எண் தவறாக நிழலிடப்பட்டிருந்தால் (அல்லது) வழங்கப்பட்ட இடத்தில் எழுதப்படவில்லை என்றால், தேர்வர் பெற்ற மொத்த மதிப்பெண்களில் இருந்து 5 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

4. OMR விடைத்தாளில் வழங்கப்பட்ட இடத்தில் தேர்வர்கள் தங்கள் கட்டைவிரல் ரேகையை பதிவு செய்யாவிட்டால், அவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணில் இருந்து இரண்டு மதிப்பெண்கள் கழிக்கப்படும். (கட்டைவிரல் ரேகை பதிவு செய்ய முடியாத மாற்றுத் திறன் தேர்வர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.)

5. ஒரு கேள்விக்குகூட பதில் குமிழிகளில் எதுவும் நிரப்பப்படவில்லை என்றால், தேர்வர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களில் இருந்து 2 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

மேலும்