போட்டித்தேர்வு தொடர் 10: மாதிரி வினாக்கள் - அரசியலமைப்பு பகுதி 2

By செய்திப்பிரிவு

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி. - 10 -

16. இந்திய அரசாங்க சட்டம், 1935-ன் படி மத்திய கூட்டாட்சி சட்டமன்றம் உள்ள அவைகள்

[a] மாநிலங்களவை
[b] மக்களவை
[c] a & b
[d] எதுவும் இல்லை

17. அரசாங்க சட்டம் 1935-ன்படி அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றம் பின்வரும் எந்த முரண்பாடுகளுக்கு தீர்வு காணும்?

[i] சட்ட அமைப்பு குறித்த சிக்கல்
[ii] மத்திய - மாகாண அரசுகள் இடையே எழும் பிரச்சினை
[iii] மாகாணங்கள் இடையே ஏற்படக்கூடிய முரண்பாடு
[a] i only
[b] ii & iii only
[c] i & iii only
[d] i, ii & iii

18. பின்வரும் கூற்றினை கருத்தில் கொள்க.

(1) ஜவஹர்லால் நேரு மாநிலங் களுக்கு இடையேயான ஒப்பந்த குழு தலைவர்.
(2) மாநில அரசாங்க அமைப்பு குழு தலைவர் சர்தார் படேல். கீழே கொடுத்துள்ள குறியீடுகளில் இருந்து சரி
யானதை தேர்வு செய்யவும்:
[a] 1 மட்டும்
[b] 2 மட்டும்
[c] 1 & 2
[d] எதுவும் இல்லை

19. பொருத்துக: பட்டியல் I & II

பட்டியல் I பட்டியல் II

A அமெரிக்கா 1. நாடாளுமன்ற அரசு
B அயர்லாந்து 2 அடிப்படை உரிமைகள்
C இங்கிலாந்து 3 அதிகார பொது பட்டியல்
Dஆஸ்திரேலியா 4 அதிகார பொது பட்டியல்

A B C D
a) 2 3 4 1
b) 2 4 1 3
c) 3 2 4 1
d) 4 3 2 1

20. எந்த ஆண்டு மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995 நடைமுறைக்கு வந்தது?

[a] 1995
[b] 1996
[c] 1997
[d] 1998

21.‘ஒவ்வொரு இந்திய குடிமகனும் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பை வழங்க வேண்டும். இது ஒவ்வொரு பெற்றோர் / பாதுகாவலரின் பொறுப்பு’ என்று எந்த விதி, சட்டத் திருத்தம் குறிப்பிடுகிறது

[a] 51 Ak & 42-வது திருத்தம்
[b] 51 Ak & 86-வது திருத்தம்
[c] 51 Aj & 86-வது திருத்தம்
[d] 51 Ak & 76-வது திருத்தம்

22. கீழ்க்கண்ட அரசியலமைப்பு கூற்றுகளில், சிறப்பு பெரும்பான்மை மூலம் எதை திருத்த முடியாது?

[a] அடிப்படை உரிமைகள்
[b] குடியரசு தலைவர் தேர்வு முறை
[c] நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்
[d] மாநிலங்கள் பிரிப்பு, சேர்ப்பு

23. நாடு சுதந்திரம் அடைந்தபோது 14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் இருந்தன. தற்போது இந்தியாவில் இருப்பது?

[a] 29 மாநிலம், 7 பிரதேசங்கள்
[b] 28 மாநிலம், 8 பிரதேசங்கள்
[c] 28 மாநிலம், 9 பிரதேசங்கள்
[d] 28 மாநிலம், 7 பிரதேசங்கள்

24. பொருத்துக: பட்டியல் I & II

A. ஐக்கிய 1. அசோம் மாகாணம்
B. மதராஸ 2. ஒடிசா மாகாணம்
C. ஒரிசா 3. உத்தர பிரதேசம்
D. அசாம் 4. தமிழ்நாடு

A B C D
[a] 2 1 3 4 [b] 3 4 2 1
[c] 3 2 4 1 [d] 2 4 1 3

25. சரியானதை தேர்ந்தெடுக்கவும்.

[a] குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் - 1938
[b] தொழிற்சாலை சட்டம் - 1961
[c] சுரங்கங்கள் சட்டம் - 1948
[d] அப்ரென்டிஸ் சட்டம் - 1952

26. எந்த ஆண்டு கொத்தடிமை ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டது

[a] 1948
[b] 1970
[c] 1976
[d] எதுவும் இல்லை

27. கீழ்க்கண்டவற்றில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்

[a] சுரண்டலுக்கு எதிரான உரிமை (23-24)
[b] சமய உரிமை (19-22)
[c] பண்பாடு, கல்வி உரிமைகள் (29-30)
[d] தீர்வு பெறும் உரிமை (பிரிவு 32-25)

28. தேசிய குழந்தைகள் கொள்கை எப்போது ஏற்கப்பட்டது?

[a] 1974
[b] 1986
[c] 1984
[d] 1976

29. தவறானதை தேர்ந்தெடுக்கவும்

[a] இந்து திருமண சட்டம் - 1955
[b] வரதட்சணை ஒழிப்பு சட்டம் - 1961
[c] கருவிலேயே பாலினம் அறியும் செயலுக்கு எதிரான சட்டம் - PCPNDT Act 1994
[d] தேசிய பெண்கள் ஆணையச் சட்டம் - 1994

30. 1992-ல் யார் தலைமையில் தேசிய மகளிர் ஆணையம் தொடங்கப்பட்டது?

[a] ரேகா சர்மா
[b] ஜெயந்தி பட்நாயக்
[c] லலிதா குமாரமங்கலம்
[d] பூர்ணிமா அத்வானி.

(அடுத்த பகுதி.. சனிக்கிழமை வரும்)

போட்டித்தேர்வு தொடர்பான ஆலோசனைகளையும், உங்களது கேள்விகளுக்கான பதில்களையும் பெற, https://www.htamil.org/00532 லிங்க்கில் பதிவுசெய்யவும்.

விடை:

16. [c] a மற்றும் b
17. [d] i,ii & iii
18. [c] 1 மற்றும் 2
19. [b] [2 4 1 3]
20. [b] 1996
21. [b] 51 Ak& 86-வது சட்டத்திருத்தம்
22. [d] மாநிலங்ககளை பிரித்தல் அல்லது சேர்த்தல்
23. [b] 28 மாநிலங்கள் மற்றும் 8 பிரதேசங்கள்
24. [b] [3 4 2 1]
25. [a] குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் - 1938
26. [c] 1976
27. [b] சமய உரிமை (19-22)
28. [a] 1974
29. [d] தேசிய பெண்கள் ஆணையச் சட்டம்-1994
30. [b] ஜெயந்தி பட்நாயக்.

முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 09: மாதிரி வினாக்கள் - அரசியலமைப்பு பகுதி 1

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்