போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி.- 9 -
கடந்த வார பகுதியில் கேள்விகளின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பை 5 பிரிவுகளாக பிரித்துப் பார்த்தோம். தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக அரசியலமைப்பு பகுதியில் சில மாதிரி வினாக்களை காணலாம்.
1. எந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர்மறுசீரமைப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது?
[a] 2018
[b] 2019
[c] 2020
[d] 2022
2. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 9-வது அட்டவணை சேர்க்கப்பட காரணமாக இருந்த முதல் சட்டத் திருத்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
[a] 1950
[b] 1951
[c] 1952
[d] எதுவும் இல்லை
3. 1976-ல் எந்த சட்டத் திருத்தம் மூலம் அடிப்படை கடமைகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது?
[a] 38-வது
[b] 24-வது
[c] 42-வது
[d] 44-வது
4. அரசியலமைப்பு சட்டத்தில் 1985-ம் ஆண்டு 52-வது சட்டத்திருத்தம் மூலமாக இணைக்கப் பட்ட 10-வது அட்டவணை தொடர்பான விதி?
[a] அடிப்படை கடமைகள்
[b] நில சீர்திருத்த சட்டம்
[c] கட்சி தாவல் தடை சட்டம்
[d] பஞ்சாயத்து ராஜ் சட்டம்
5. 1989-ம் ஆண்டு எந்த சட்டத்திருத்தம் விதி 326-ல் வாக்களிப்பதற்கான வயது 21-ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது?
[a] 60-வது
[b] 61-வது
[c] 42-வது
[d] 52-வது
6. எந்த ஆண்டு 76-வது சட்டத்திருத்தம் மூலமாக தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டம் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது?
[a] 1989
[b] 1990
[c] 1992
[d] 1994
7. 2002-ம் ஆண்டு 86-வது சட்டத்திருத்தம் மூலம் அரசியலமைப்புசட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட விதிகள்?
[a] 21A & 51Ak
[b] 21A & 45
[c] 45 & 51Ak
[d] 21A & 39A
8. 44-வது அரசியலமைப்பு திருத்தம் 1978-ன்படி எந்த அடிப்படை உரிமை பகுதி III-ல் இருந்து நீக்கப்பட்டு பின்னர் பகுதி XII-ல் சேர்க்கப்பட்டது?
[a] அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை
[b] சுரண்டலுக்கு எதிரான உரிமை
[c] சொத்துரிமை
[d] எதுவும் இல்லை
9. விதி 13-ன் கீழ் அரசியலமைப்பு திருத்தம் என்பது சட்டம் என்ற வரையறைக்குள் வராது என்றாலும், எந்த வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமை என்பது அடிப்படை கட்டமைப்பு என கூறியது?
[a] மினர்வா மில்ஸ் வழக்கு
[b] இந்திரா சஹானி வழக்கு
[c] கேசவானந்த பாரதி வழக்கு
[d] எஸ்.ஆர்.பொம்மை வழக்கு
10. 102-வது அரசியலமைப்பு திருத்தம் 2018-ன்படி அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாக மாற்றப்பட்ட தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எந்த விதியின் கீழ் நியமிக்கப்பட்டது?
[a] 338A
[b] 338B
[c] 340
[d] 342A
11. ஒழுங்குமுறை சட்டம் 1773-ன் படிஏற்படுத்தப்படாத அம்சம் எது?
[a] வங்காள ஆளுநரை தலைமைஆளுநர் என நியமித்தது
[b] 4 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டது
[c] கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டது
[d] 6 உறுப்பினர் கொண்ட கட்டுப்பாடு வாரியம் உருவாக்கப்பட்டது
12. இலாகாக்களை பிரித்து கொடுக்கும் முறை எந்த சட்டம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது?
[a] இந்திய சட்டமன்றங்கள் சட்டம் 1861
[b] இந்திய சட்டமன்றங்கள் சட்டம் 1892
[c] இந்திய சட்டமன்றங்கள் சட்டம் 1909
[d] அரசாங்க சட்டம் 1919
13. இந்திய அரசு பணி சட்டம் நடை முறைப்படுத்தப்பட்ட ஆண்டு?
[a] 1861
[b] 1892
[c] 1922
[d] எதுவும் இல்லை
14. இந்திய சட்டமன்றங்கள் சட்டம் 1909-ன்படி வைசிராயின் நிர்வாக குழுவில் நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்
[a] தாதாபாய் நவ்ரோஜி
[b] பெனாரஸ் ராஜா
[c] சர் தினகர் ராவ்
[d] எஸ்.பி.சின்ஹா
15. இந்திய சட்டமன்றங்கள் சட்டம் 1909-ன் படி தனி தொகுதி கொடுத்ததன் மூலம் வகுப்புவாத பிரதிநிதித்துவத்துக்கு வழிவகுக்கப்பட்டது. வகுப்புவாத வாக்காளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
[a] கர்சன் பிரபு
[b] மின்டோ பிரபு
[c] செம்ஸ்போர்டு பிரபு
[d] ராம்சே மெக் டொனால்ட்
(பகுதி-2 நாளை...)
விடை:
1. [b] 2019
2. [d] எதுவும் இல்லை
3. [c] 42-வது சட்டத் திருத்தம்
4. [c] கட்சி தாவல் தடை சட்டம்.
5. [b] 61-வது சட்டத் திருத்தம்
6. [d] 1994
7. [a] 21A & 51Ak
8. [c] சொத்துரிமை
9. [c] கேசவானந்த பாரதி வழக்கு.
10.[c] 340 [d] 342A
11.[d] 6 உறுப்பினர் கொண்ட கட்டுப்பாடு வாரியம் உருவாக்கப்பட்டது.
12.[a] இந்திய சட்டமன்றங்கள் சட்டம் 1861
13.[a] 1861
14.[d] எஸ்.பி.சின்ஹா
15.[b] மின்டோ பிரபு.
முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 08: அறிவோம்.. தெளிவோம்!
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago