கணிதவியலாளர், பொறியாளர், வானியல் நிபுணர், தத்துவவாதி கலிலியோ கலிலி இத்தாலியின் பைசா நகரில் 1564 பிப்ரவரி 15-ல் பிறந்தார். சிறு வயதிலேயே எதையும் நுணுக்கமாக ஆராய்வார்.
‘ஆண்களுக்கு 32 பற்கள், பெண்களுக்கு 28 பற்கள்’ என்று அரிஸ்டாட்டில் கூறியதாக பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்பட்டது. பின்னர் தன் அம்மா, பக்கத்து வீட்டுப் பெண்களின் பற்களையும், சில ஆண்களின் பற்களையும் எண்ணிப் பார்த்து ‘அரிஸ்டாட்டில் சொன்னது தவறு, இருவருக்குமே 32 பற்கள்தான்’ என்றாராம்.
அப்பாவின் ஆசைப்படி, மருத்துவம் படிக்க பைசா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மருத்துவப் படிப்பை நிறுத்திவிட்டு கணிதம் பயின்றார். கல்லூரியில் கணிதப் பேராசிரியராக 18 ஆண்டுகள் பணியாற்றினார்.
கோள்களைச் சுற்றிக் காணப்படும் ஒளிவட்டம், சூரியனில் காணப்படும் புள்ளிகள் ஆகியவற்றை தான் கண்டறிந்த டெலஸ்கோப் மூலம் பார்த்து ஆராய்ந்தார்.
» டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் வருமான வரி துறையினர் சோதனை - எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்
» பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஏர் இந்தியா 250 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் - முழு விவரம்
கோள்களைப் பற்றிய முந்தைய காலத்து கோட்பாடுகளை இந்த ஆராய்ச்சி தகர்த்தது. இந்த அனுபவங்களைத் திரட்டி ‘தி டயலாக் ஆஃப் தி டூ பிரின்சிபல் சிஸ்டம் ஆஃப் தி வேர்ல்டு’ என்ற புத்தகத்தை எழுதி பிரபலமானார் நவீன இயற்பியலின் தந்தை என போற்றப்படும் கலிலியோ.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago