மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர், உயிரியல் விஞ்ஞானி ஹர் கோவிந்த் குரானா. 1922 ஜனவரி 9-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் ராய்ப்பூர் கிராமத்தில் இவர் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1945-ம் ஆண்டு வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அரசு உதவித்தொகை பெற்று இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். 1953-ல்காமன்வெல்த் ஆய்வுக் கழகத்தில் கரிம வேதியியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். மூலக்கூறு உயிரியல் துறையில் ஆய்வு செய்த இவர் ஆர்.என்.ஏ. பற்றிய ஆய்வுகளுக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசு 1968-ல் வழங்கப்பட்டது. மேலும் இவர் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்ததற்கு அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம் பெற்றார்.
இவரது பங்களிப்பை போற்றும் வகையில், விஸ்கான்சின் மேடிசன் உயர் தொழில்நுட்பத் துறையும் இந்திய- அமெரிக்க அறிவியல் தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து குரானா புரோகிராம் என்ற அமைப்பை 2007-ல்தொடங்கின. செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்த அறிவியல் மேதை குரானா 89-வது வயதில் காலமானார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago