இந்திய மாமணி என்று அழைக்கப்படும் விருது; இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. இந்தியாவின் ரத்தினம் என்பதுதான் பாரத ரத்னா சொல்லின் பொருள். இந்த விருதை முதன்முதலில் 1954 ஜனவரி 2-ம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் வழங்கினார். இந்த பதக்கமானது அரச மரத்தின் இலையைப்போல வடிவமைக்கப்பட்டது. முதல் பாரத ரத்னா விருது சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சர் சி.வி. ராமன், ராஜகோபாலாச்சாரி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகளான அன்னை தெரசாவுக்கு 1980-ல் இவ்விருது வழங்கப்பட்டது.
இளமையில் பாரத ரத்னா விருதை முதன்முதலில் வென்றவர் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு 2014-ல் இவ்விருது வழங்கப்பட்டது. பாரத ரத்னா விருது வழங்கப்படத் தொடங்கிய அதே ஆண்டில்தான் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. ‘தனிச்சிறப்பு வாய்ந்த, சிறந்த பணிகளுக்காக' இந்திய அரசால் 1954 ஜனவரி 2 அன்று பத்ம விபூஷண் விருது முதன்முதலில் வழங்கப்பட்டது. இது நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகும்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
7 hours ago
வெற்றிக் கொடி
7 hours ago
வெற்றிக் கொடி
7 hours ago
வெற்றிக் கொடி
7 hours ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago