அக்.12: இன்று என்ன? - உரிமை காக்கும் ஆணையம்

By செய்திப்பிரிவு

சாதி, மதம், பாலினம் பேதமின்றி வாழும் உரிமை குடிமக்கள் அனைவருக்கும் உள்ளது. இதனை உறுதிப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 1993 அக்.12-ல் இவ்வாணையம் நிறுவப்பட்டது. மனித உரிமைகளுக்கு எதிராக கொண்டு வரப்படும் சட்டத்தினை ஆய்வு செய்தல், ஆதிதிராவிடர், பழங்குடியினரின் குறைகளை களைதல், பெண்கள், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்டவை இவ்வாணையத்தின் முதன்மையான பணியாகும். மனித உரிமைகள் மீறப்படும் போது பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுத்தாலோ, ஆணையம் தானாகவோ முன் வந்து பாதிக்கப்பட்டவர்களை விசாரித்து நடவடிக்கைகள் எடுக்கும். இவ்வாணையம் தலைவர் ஒருவரையும், நான்கு உறுப்பினர்களையும் கொண்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE