இன்று என்ன? - அன்றாட வாழ்க்கையை ஓவியமாக்கியவர்

By செய்திப்பிரிவு

பெண் ஓவியர், பியானோ கலைஞர் அம்ரிதா ஷெர்கில். இவர் 1913 ஜனவரி 30-ம் தேதி ஹங்கேரியின் புடாபெஸ்டில் பிறந்தார். ஷெர்கில் குடும்பம் ஹங்கேரியில் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டது. இதனால் இவரது குடும்பம் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தது.

சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்தார். தன்னுடைய எட்டு வயதில் முறையாக ஓவியம் கற்க தொடங்கினார். மக்களின் அன்றாட வாழ்க்கை முறை, சமூகத்தில் பெண்களின் நிலையை சித்தரிக்கும் வகையில் ஓவியங்கள் வரைந்தார்.

1932-ம் ஆண்டு “யங் கேர்ள்ஸ்” என்ற இவரது தைல ஓவியம் (ஆயில் பெயின்ட்டிங்) மக்களிடம் வரவேற்பை பெற்றது. 1935-ல் தி கல்கத்தா ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் தலைமை எழுத்தாளராகவும் பணியாற்றினார்.

ஷெர்கில்லை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசு அவரது படைப்புகளை கலைப் பொக்கிஷங்களாக அறிவித்து, டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறது. இவரது கலை பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘ஹில் வுமன்’ ஓவியத்தை இந்திய அரசு 1978-ம் ஆண்டு தபால் தலையாக வெளியிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE