பெலாரஸின் எல்லையிலுள்ள சோவியத் ரஷிய ஃபெடரேட்டிவ் சோசலிச குடியரசில் 1920 ஜனவரி 2-ம் தேதி ஐசாக் அசிமோ பிறந்தார். இவர் சிறு வயதிலேயே அறிவியல் புனைகதைகளைப் படிக்கத் தொடங்கினார். ஆனால் அவர் தந்தை அவற்றைப் படிப்பது வீண் வேலை என்பார். அதற்கு அறிவியல் எனும் தலைப்பைக் கொண்டுள்ளது எனவே அது கல்வி சார்ந்தது என அசிமோ கூறுவார். 11 வயதில் சொந்தமாகக் கதை எழுத அசிமோ தொடங்கினார்.
19 வயதில் அவரது அறிவியல் புனைகதைகள் நாளிதழ்களில் வெளியானது. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1939-ல் வேதியியலில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், 1948-ல் உயிர்வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்றார். 1958-ல் இருந்து முழு நேர எழுத்தாளர் ஆனார். 1979-ல் பாஸ்டன் பல்கலைக்கழகம் அவர் எழுத்தை கவுரவப்படுத்தும் விதமாக உயிர்வேதியியலில் பேராசிரியராகப் பணியமர்த்தி பெருமைப்படுத்தியது. 1985-ல் இருந்து 1992 வரை அமெரிக்க மனிதநேய சங்கத்தின் கவுரவ முதல்வராக பதவி வகித்தார். இவரது நினைவாக ஹோண்டா நிறுவனம் உருவாக்கிய ரோபோவுக்கு ’அசிமோ’ என்று பெயர் சூட்டப்பட்டது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago