நகைச்சுவை எழுத்தாளர் மார்க்

By செய்திப்பிரிவு

உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன். இவர் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், மிஸோரியில் 1835 நவம்பர் 30-ம் தேதி பிறந்தார். 11 வயதில் தந்தை இறந்ததால், அச்சகத்தில் உதவியாளராக பணிபுரிந்தார்.

பின்னர் ‘பஃபெல்லோ எக்ஸ்பிரஸ்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1865-ல் இவரது ‘தி செலிபிரேடட் ஜம்ப்பிங் ஃபிராக் ஆஃப் கேலவெரஸ் கவுன்டி’ என்ற நகைச்சுவைக் கதை வெளிவந்தது.

இவரது எழுத்திலும், பேச்சிலும் நகைச்சுவை கலந்திருந்ததால் உலகம் முழுவதும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தார். 1874 முதல் 1891 வரை நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் பல எழுதினார். 1876-ல் வெளிவந்த ‘தி அட்வென்சர்ஸ் ஆஃப் டாம் சாயர்’ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தனது எழுத்து மூலம் சம்பாதித்த பணம் அனைத்தையும் கண்டுபிடிப்புகளுக்கு செலவழித்தார். மேலும் இவர் தொடங்கிய பதிப்பகமும் நஷ்டமடைந்தது. தன்னுடைய விடாமுயற்சியால் பல இடங்களில் உரையாற்றியும், எழுதியும் சம்பாதித்ததை கொண்டு கடன்களை அடைத்தார். இவரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள கென்னடி கலைநிகழ்ச்சி மையம் ஆண்டுதோறும் மார்க் ட்வைன் பெயரில் விருது வழங்கி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்