இன்று என்ன? - டென்னிஸ் ஆட்டத்தின் முடிசூடா ராணி

By செய்திப்பிரிவு

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 1986 நவம்பர் 15-ம் தேதி மும்பையில் பிறந்தார். 1992-ல் படிப்பதற்கு பள்ளியிலும், விளையாடுவதற்கு டென்னிஸ் பயிற்சியிலும் சேர்க்கப்பட்டார் சானியா. 8 வயதில், தன்னைவிட இரண்டு மடங்கு அதிக வயதுள்ள வீரரை வென்றார். 2004-ல் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். 2006 ஒற்றையரில் வெள்ளி, கலப்பு இரட்டையரில் தங்கம், மகளிர் அணி பிரிவில் வெள்ளி, 2010 ஒற்றையர் போட்டியில் வெண்கலம், கலப்பு இரட்டையரில் வெள்ளி, 2014 கலப்பு இரட்டையரில் தங்கம், காமன்வெல்த் போட்டியில் வெள்ளி என ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார்.

சர்வதேச அளவில் புகழப்படும் ‘ஃபோர்ஹேண்ட் ஷாட்’ நுட்பத்தில் விளையாடுவதில் வல்லவர். 2004-ல் அர்ஜுனா விருதும், 2006-ல் பத்மஸ்ரீ விருது, 2015-ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, 2016-ல் பத்ம பூஷண் விருதையும் மத்திய அரசு இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. இவரது சுயசரிதை நூலான ‘ஏஸ் அகைன்ஸ்ட் ஆட்ஸ்’ (Ace Against Odds) 2016-ல் வெளிவந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொழில் முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் சானியா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE