நாடகாசிரியர், எழுத்தாளர், கவிஞர் ஆஸ்கர் வைல்டு. அயர்லாந்தின் டப்லின் நகரில் 1854 அக்டோபர் 16-ம் தேதி பிறந்தார். ஒன்பது வயது வரை வீட்டிலேயே கல்வி பயின்றார். பின்னர், பள்ளியில் படித்த சமயத்தில் கிரேக்கம் மற்றும் ரோமானிய இலக்கியம், தத்துவங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரியில் கிரேக்க மொழிப் பாடத்தில் தங்கப்பதக்கம் வென்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோதுதான் தனது படைப்பாற்றலை உலகுக்கு வெளிப்படுத்தினார்.
இவர் எழுதிய ‘ரவேனா’ கவிதை பல்கலைக்கழகத்தின் மிகச் சிறந்த ஆங்கிலப் படைப்புக்கான பரிசு வென்றது. விற்பனை சரிந்திருந்த ‘லேடீஸ் வேர்ல்ட்' மகளிர் இதழின் ஆசிரியராக பொறுப்பேற்ற இரண்டாண்டுகளில் அதன் விற்பனையை அதிகரித்துக் காட்டினார்.
பெண்களின் உணர்வுகளையும், அறிவாற்றலையும் பிரதிபலிக்கும் கட்டுரைகளை வெளியிட்டு புகழ்பெற்றார். 1892-ல் இவரது முதல் நாடகம் ’லேடி வின்டர்மியர்’ஸ் ஃபேன்’, ’ஏ வுமன் ஆஃப் நோ இம்பார்ட்டன்ஸ்’, ’அன் ஐடியல் ஹஸ்பன்ட்’, ’த இம்பார்ட்டன்ட் ஆஃப் பீயிங் ஏர்னஸ்ட்’ ஆகியன இவரது தலைசிறந்த நாடகங்களாகப் போற்றப்படுகின்றன. சிறை அனுபவங்களை சித்தரிக்கும் ‘The Ballad of Reading Gaol’ கவிதை அவர் கவித்துவத்துக்கு சான்று.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago