இன்று என்ன - ‘தி டைம் மெஷின்’ நாவலாசிரியர்

By செய்திப்பிரிவு

வரலாறு, அரசியல், சமூகம் என அனைத்து துறைகளிலும் எழுத்துகள் மூலம் தனி முத்திரை பதித்தவர் ஆங்கில எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ்.

இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள ப்ரூம்ளி நகரில் 1866 செப்டம்பர் 21-ம் தேதி பிறந்தார். சிறு வயதில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று படுக்கையில் இருந்த போது தந்தை வாங்கி தந்த வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படித்தார்.

‘சாட்டர்டே ரிவ்யூ’ என்ற இதழில் புத்தக விமர்சகராக பல ஆண்டுகள் பணியாற்றினார். சமூக விமர்சனங்கள், அரசியல் கருத்துகள், நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை சிக்கல்கள், பெண்ணுரிமைப் போராளிகள் குறித்த கருத்துகள் இவரது பிற்கால நூல்களில் அதிகம் இடம்பெற்றன. கல்லூரி நாட்களில் ‘தி க்ரோனிக் ஆர்கோநாட்ஸ்’ என்ற காலப்பயணம் குறித்த சிறுகதை எழுதினார். இவரது முதல் நாவலான ‘தி டைம் மெஷின்’ 1895-ல்வெளிவந்தது. இதனால் தொலைநோக்கு பார்வை கொண்ட எழுத்தாளர் என மக்கள் பாராட்டினர்.

1920-ல் வெளிவந்த ‘அவுட்லைன் ஆஃப் தி வேர்ல்டு’ புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. கடவுள் பற்றிய தனது கண்ணோட்டத்தை ‘காட் தி இன்விசிபிள் கிங்’ என்ற நூலில் எழுதினார். வாழ்நாளில் 50 ஆண்டு காலம் எழுத்துக்காக அர்ப்பணித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE