இன்று என்ன? - சர்வதேச மல்யுத்த சாம்பியன் போகத்

By செய்திப்பிரிவு

ஆசிய சாம்பியன்ஷிப்பிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். ஹரியானா சர்கிதாத்ரி கிராமத்தில் 1994 ஆகஸ்ட் 25-ம் தேதி பிறந்தார். 2013-ல்புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​52 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

2014-ல் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். 2015-ல் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார்.

2018 கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் தங்கம் வென்றார். 2019 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 53 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்றார். 2021-ல் போலந்து ஓபனில் 53 கிலோ பிரிவில் போகட் தங்கம் வென்றார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE