இன்று என்ன? - ஒலிம்பிக் நாயகி சிந்து

By செய்திப்பிரிவு

ஒலிம்பிக் வரலாற்றில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் பி.வி. சிந்து. இவர் தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 1995 ஜூலை 5-ம் தேதி பிறந்தார். இவரின் பெற்றோர் கைப்பந்து விளையாட்டில் தேர்ந்தவர்கள்.

சிந்துவுக்கு மருத்துவராக வேண்டும் என்பதே சிறுவயது லட்சியம். பிறகு ஐதராபாத்தை சேர்ந்த கோபிசந்த் பேட்மிண்டனில் சாதித்ததை பார்த்து விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. 8 வயதில் பேட்மிண்டன் ராக்கெட்டை பிடித்தார். கோபிசந்த் அகாடமியில் சேர்ந்தார்.

தேசிய பள்ளிகள் விளையாட்டு போட்டியில் வென்றார். இந்திய அளவில் சர்வதேச அரங்கில் 2009-ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சப்-ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். 2010-ல் ஈரானில் நடைபெற்ற பேட்மிண்டன் சேலஞ்ச் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

2016-ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்றார். 5 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள், 2 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்று தனக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்