இந்தியாவின் தங்க மங்கை, இந்திய தடகளத்தின் அரசி, சர்வதேச அரங்கில் தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர் பி. டி. உஷா. இவர் 1964 ஜூன் 27-ம் தேதி கேரளாவின் கோழிக்கோடில் பிறந்தார். பள்ளியில் நடக்கும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்வார்.
1977-ம்ஆண்டு 13 வயதில் தேசிய அளவிலான தடகள விளையாட்டில் 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டார். பிறகு, பல தேசிய போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றதோடு, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். குவைத்தில் நடைபெற்ற சாம்பியன் தடகளப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில், ‘தங்கம்’ வென்றார்.
அதன்பிறகு, 1984-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இறுதிபோட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை இவரே என்ற பெருமை பெற்றார். திருமணத்திற்குப் பிறகு 3 ஆண்டுகள் விளையாட்டில் பங்கேற்கவில்லை. தன்னுடைய கணவர் அளித்த ஊக்கத்தின் காரணமாக 1998-ல் ஜப்பானில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம்’ வென்றார்.
1984-ல் மத்திய அரசு அர்ஜுனா விருதும், பத்ம விருதும் வழங்கியது. தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் ராஜ்யசபா எம்பியாகவும் இருக்கிறார்.
» 7 குழந்தையுடன் ஸ்கூட்டரில் சென்றவர் மீது வழக்கு
» மணிப்பூர் மாநில நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் அமித் ஷா விளக்கம்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago