தாய்மொழியில் கணிதம்

By செய்திப்பிரிவு

உலகம் உருவாகிய நாளின் தொடக்கத்திலேயே எண்ணுவதும் தொடங்கியிருக்க வேண்டும். சிக்கிமுக்கி கற்கள் கொண்டு நெருப்பை உருவாக்கி உணவை சமைத்து உண்டு உயிர் வாழ இரண்டு என்ற எண்ணிக்கையில் ஆரம்பித்து, படிப்படியாக வளர்ச்சி அடைந்து இப்போது எண்ணிலடங்கா எண்கள் என்ற கருத்துரு உருவாகக் காரணம்.

எல்லாவற்றையும் எவ்வளவு என்று அளந்து பார்க்கும் போது அளவு என்ற அளவுகோல் அறிந்திருக்க வேண்டும். எல்லாவற்றி லும் கணக்கு என்பதை ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதர்கள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

அதனடிப்படையில் காலத்தையும் கணித்தனர். வருடம், மாதம், வாரம், நாட்கள், நல்ல நேரம், அமாவாசை, பெளர்ணமி என்றுபலவும் எப்போது நிகழும் என்பதை சரியான முறையில் கணித்து அதனை இன்றைக்கும் பின்பற்றி வருகிறோம். இப்போதுள்ள தொழில்நுட்ப ஆய்வுகளே தோற்றுப் போகிற சூழலில். இவை எதுவும் இல்லாத காலத்திலேயே கணிதத்தால் மட்டுமேமேற்கண்டவற்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

வாயால் போடும் கணக்கு: என் பாட்டனார் வாயால் போடும் கணக்கை, நான் பேனா பேப்பர் கொண்டு போட்டேன். என் பிள்ளை கால்குலேட்டர் கொண்டு போடுகிறார்கள். அவர்கள் பிள்ளைகள் மொபைல் கொண்டு போடுகிறார்கள். இன்னும் போகப் போக என் கொள்ளு பிள்ளைகள் எப்படி என்று எனக்கு தெரியவில்லை.அடிப்படை வாழ்வியல் கணிதம் மறந்து வலைத்தளங்களில் கணிதம் படிக்கிறோம். ஆரம்பப் பள்ளிகளில் எண்ணுவது விரல் விடுவதுகூட இப்போது எப்படி என்பது தெரியவில்லை. எல்லாம் இயந்திரமயமாகி மூளைக்கு வேலையில்லாமல் போய்விட்டது.

ஆரம்பப் பள்ளிகள் வாழ்வியல் கணிதம் கற்று கொடுக்க வேண்டும். தொடர்ந்து படிக்கும் மேற்படிப்புகள் அறிவை வளர்ச்சி அடைய செய்து சமுதாயம் முன்னேற வழி வகுக்க வேண்டும். இதனை சமூகமும், பெற்றோரும் உணர்ந்து பிள்ளைகளுக்குக் கணிதம் கற்றுத்தர வேண்டும். வாழ்வியல் கணக்கை தாய்மொழி கல்வி மட்டுமே கற்றுத் தர முடியும். அன்னிய மொழி வேண்டாம் என்பதில்லை. தெளிவாக அறிந்து கொள்ள தாய்மொழி தான் சிறந்த தேர்வு.

கட்டுரையாளர் கணிதத்துறை விரிவுரையாளர், அரசினர் மகளிர் கல்லூரி, கும்பகோணம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE