திருநெல்வேலி: திருநெல்வேலியிலிருந்து மலேசியாவுக்கு 2 ஆயிரம் பொங்கல் பானைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பானைகள் மலேசியாவுக்கு ஏற்றுமதியாகாத நிலையில் தற்போது 10 மடங்கு அதிகமாக பானைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது உற்பத்தியாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் கைவினை கலைஞர்களால் விதவிதமான வடிவங்கள் மற்றும் அளவுகளில் மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்னரே இப்பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம் குறிச்சி, காருகுறிச்சி, ஆழ்வார்குறிச்சி, ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொங்கலுக்கான பானை, சட்டி, மூடி, அடுப்பு, தீப விளக்குகள், பூந்தொட்டிகள், கும்ப கலசங்கள், தீச்சட்டி என்று பல்வேறு மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் ஆற்றுப்படுகைகள், குளங்கள், நீராதாரங்களின் படுகைகளில் இருந்து மண்பாண்டங்கள் தயாரிக்க கைவினை கலைஞர்களால் களிமண் எடுக்கப்பட்டு வருகிறது. களிமண்ணுடன் ஆற்றங்கரைகளில் இருந்து கிடைக்கும் பசை தன்மையுள்ள குறுமண்ணை குறிப்பிட்டவிகிதத்தில் கலந்து மண்பாண்டங்களை தயாரிக்கிறார்கள். அவ்வாறு தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கரோனா காரணாமாக கடந்த 2 ஆண்டுகளாக பொங்கலுக்கான பானைகள் திருநெல்வேலியிலிருந்து கொள்முதல் செய்யப்படவில்லை. இந்நிலையில் வரும் பொங்கலுக்காக கடந்த 2 மாதங்களாக 2 ஆயிரம் பானைகள் தயாரிக்கப்பட்டு, அவற்றில்வண்ணம் பூசி அலங்காரம் செய்யப்பட்டு தற்போது சென்னைக்கு கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சரக்கு கப்பலில் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கரோனாவுக்குப்பின் மொத்தமாக 2 ஆயிரம் பானைகள் திருநெல்வேலியிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டிருப்பது இங்குள்ள உற்பத்தியாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இதுகுறித்து மேலப்பாளையம் குறிச்சி மண்பாண்ட உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.முருகன் கூறியதாவது: கரோனாவுக்குமுன் 10 ஆண்டுகளாக பொங்கலையொட்டி 4 முதல் 5 லிட்டர் கொள்ளளவுள்ள 100முதல் 200 பானைகள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டு வந்தது. கரோனாவால் 2 ஆண்டுகளாக பானைகள் கொள்முதல் ஆகவில்லை.
தற்போது 3 லிட்டர்கொள்ளளவுள்ள ஆயிரம் பானைகளும், 2.5 லிட்டர் கொள்ளளவுள்ள ஆயிரம் பானைகளும் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பானையிலும் வண்ணம் பூசி, மஞ்சள் குலை, மாவிலை தோரணம், தாமரை இதழ்கள் உள்ளிட்ட வண்ண ஓவியங்களையும் வரைந்து அழகுபடுத்தினோம்.
இதற்காக மதுரையிலிருந்து கோயில் கோபுர சிற்ப வேலைப்பாடுகளில் ஈடுபடும் 5 கலைஞர்களை வரவழைத்து பானைகளில் வண்ண ஓவியங்களை வரைந்தோம். கடந்த 2 மாதமாக இப்பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்து பானைகளை கண்டெய்னரில் ஏற்றி சென்னைக்கு அனுப்பியிருக்கிறோம். அங்கிருந்து மலேசியாவுக்கு கப்பலில் அவை கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒரு பானைக்கு ரூ.150 என்ற மொத்த விற்பனை விலையில் இந்த பானைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த பானைகள் மலேசியாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படும் பொங்கல் சந்தைகளிலும், வணிக வளாகங்களிலும் பொங்கலுக்கு 10 நாட்களுக்குமுன் விற்பனைக்கு வைக்கப்படும். இதுபோல் கடந்த ஒரு மாதத்துக்குமுன் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக இங்கிருந்து 20 லட்சம் மண் அகல்விளக்குகளும் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கரோனாவுக்குமுன் 60 ஆயிரம் விளக்குகளே அனுப்பப்பட்டன. இம்முறை 4 மடங்கு அதிகமாக மண் அகல்விளக்குகள் அனுப்பப்பட்டன என்று தெரிவித்தார். பானைகளுடன், பொங்கல் வைக்கபயன்படும் வெல்லம், ஏலக்காய் மற்றும் கரும்பு, மஞ்சள் குலை உள்ளிட்டவையும் தனித்தனி கண்டெய்னர்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மலேசியாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago