பள்ளிக் கல்வித்துறையின் துபாய் சுற்றுலா பயணம்: காஞ்சிபுரம் நெசவாளி மகனின் சுவாரஸ்ய அனுபவம்

By செய்திப்பிரிவு

அரசு பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மாண வர்களுக்கு தாங்கள் படிக்கின்ற பாடங்களில் இருந்தே வினாடி வினா போட்டிகள் கடந்த ஆண்டு நடத்தப்பட்டன. வினாக்கள் பாடப் பகுதியில் இருந்து கேட்கப்பட்டாலும் மாணவர்கள் அறிவுத்திறனை மேம்படுத்துவதாகவும், சிந்தனைத்திறனை மதிப்பிடும் வகையிலும் போட்டி அமைந்தது.

மாநில அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற 68 மாணவ, மாணவியர் வெளிநாடு சுற்றுலாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வாறு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏழை நெசவாளி மகன் லோகேசுக்கு கிடைத்தது. இது அரிதான நிகழ்வு மட்டுமல்லாமல் சுவாரஸ்யமானதும்தான். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை லோகேஷ் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

காஞ்சிபுரம் அ.க.தங்கவேலர் நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தபோது வினாடி வினா போட்டியில் பங்கேற்றேன். ஆரம்பத்தில் விளையாட்டாக கலந்து கொண்டேன். முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே வெளிநாடு செல்ல வாய்ப்பு இருப்பதை அறிந்து 2-வது சுற்றுக்கு சற்று மெனக்கெட்டு படித்தேன். நான் தேர்வான தகவல் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அப்பா ஹரிகிருஷ்ணன் கைத்தறி நெசவாளி, அம்மா தேவி இல்லத்தரசி. நான் வெளிநாடு செல்லப் போவதை அறிந்த பெற்றோர் மகிழ்ச்சியில் திளைத்தனர். வானத்தில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்து ஆனந்தப்பட்ட எனக்கு அதில் ஏறிச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவுகூட கண்டதில்லை.

திருச்சியில் அப்பா வழியனுப்பிவைத்தார். அங்கு மாவட்ட ஆட்சியர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை சந்தித்த பிறகு, தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர். தஞ்சை பெரிய கோயில், சரஸ்வதி மண்டபத்தை முதன்முறையாக பார்த்து வியந்தேன்.

நவ.10-ம் தேதி திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானத்தில் பறந்தோம். அப்போது மேகங்களில் மிதப்பது போல உணர்ந்தேன். 4 மணி நேரம் பயணம் செய்தபின் ஷார்ஜா சென்றடைந்தோம். விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றது, அழகான சாலைகளில், நீண்ட கப்பல் போன்ற சொகுசு காரில் பயணம் செய்தது மலரும் நினைவுகளாக மனதில் பதிந்தது.

முதல் அறிவுரை: துபாயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, "இங்கு பொதுஇடங்களில் எச்சில் துப்பக்கூடாது, குப்பை கொட்டக் கூடாது, மீறினால் அபராதம் செலுத்த நேரிடும்" என்ற முக்கியமான அறிவுரை வழங்கப்பட்டது. துபாயில் நட்சத்திர ஹோட்டலில் தங்கிய பிறகு, மறுநாள் காலை அபுதாபியில் பாலைவனத்தில் ஒட்டக சவாரிக்கு திட்டமிடப்பட்டது.

சுற்றிப் பார்த்த பிறகு துபாயில் நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டோம். காலை விடிந்த பிறகு அபுதாபியில் ‘டெசர்ட் சஃபாரி’ செய்தோம். அங்குதான் முதன்முதலில் ஒட்டகம் கண்டு அதை தொட்டு பார்த்தேன். பிறகு அதன் மீது அமர்ந்து சவாரி செய்தோம். அங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போது கண்டு மகிழ்ந்தோம்.

உணவு பரிமாறிய அமைச்சர்: நவ. 11-ல் அபுதாபியில் லாரா அருங்காட்சி யகத்தை சுற்றிப் பார்த்தோம். அங்குள்ள பழமையான சிற்பங்கள், ஓவியங்கள், பிரமாண்டமான மசூதி, லேசர் ஒளியில் மிளிர்ந்த பிரசிடன் ஷியல் அரண்மனை ஆகியவை கண்கொள்ளாகாட்சியாக இருந்தது. துபாயின் வரலாற்றைகாட்சிப் படமாக பார்த்தது மறக்க முடியாத அனுபவம்.துபாயில் கப்பலில் பயணித்த போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எங்களுக்கு உணவு பரிமாறியது பசுமையான நினைவுகளாகும்.

நவ.12-ல் உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா மீது ஏறிய தருணம் வாழ்க்கையில் மறக்க முடியாதது. 163 அடுக்குமாடி கட்டிடத்தில் 127-வது மாடிவரை சென்றோம். அங்குள்ள மீன் காட்சியகத்தில் அரியவகை மீன்கள் கொள்ளை அழகாக இருந்தன. மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்மாண்டமான முகமது பின் ராஷித் நூலகத்தை சுற்றிப் பார்க்கையில், தமிழகத்தின் சார்பில் அந்த நூலகத்திற்கு 1,000 புத்தகங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்.

நவ.13 துபாயில் இரவு புறப்பட்டு மறுநாள் காலை திருச்சி வந்தடைந்தோம். அந்த ஊரு போல நம்ம ஊரும் தூய்மையையும், சுகாதாரத்தையும் கடை பிடித்தால் நன்றாக இருக் கும் என்றார் லோகேஷ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்