திருவள்ளூர் | ஸ்மார்ட் பிளஸ் பிளஸ் தரத்துக்கு மாறிய அங்கன்வாடி மையங்கள்: வண்ண ஓவியங்களால் ஜொலிக்கிறது

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் பிளஸ் பிளஸ் மையங்களாக மாறிய அங்கன்வாடி மையங்கள் வண்ண ஓவியங்களால் ஜொலிக்கிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களை படிப்படியாக மேம்படுத்தும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது இரு அங்கன்வாடி மையங்கள் ஸ்மார்ட் பிளஸ் பிளஸ் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் 26 அங்கன்வாடி மையங்களை ஸ்மார்ட் பிளஸ் பிளஸ் மையங்களாக மாற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பூந்தமல்லி, வில்லிவாக்கம், பள்ளிப்பட்டு, எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 13 ஊராட்சி ஒன்றியங்களில் 1,760 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களுக்கு நாள் தோறும் 2 வயது முதல், 5 வயதுக்குட்பட்ட 42 ஆயிரம் குழந்தைகள் வந்து, விளையாட்டோடு முன்பருவ கல்வியை கற்றும் ஊட்டச் சத்துள்ள உணவு வகைகளை உண்டும் மகிழ்கின்றனர்.

ஸ்மார்ட் டிவி: இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை படிப்படியாக தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மப்பேடு, அழிஞ்சிவாக்கம் பகுதிகளில் உள்ள இரு அங்கன்வாடி மையங்கள், இரு தனியார் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி ரூ.12.58 லட்சம் மூலம் ஸ்மார்ட் டிவி, கண்காணிப்பு கேமராக்கள், வெளிப்புற விளையாட்டு உபகரணங்கள், ஊட்டச்சத்து தோட்டம்,பாடங்கள் அடங்கிய ஓவியங்களால் ஆன உட்புற, வெளிப்புற சுற்றுச்சுவர்கள் ஆகிய வசதிகளுடன் ஸ்மார்ட் பிளஸ் பிளஸ் அங்கன்வாடி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகள், ஸ்மார்ட் டிவியில் ஒளிபரப்பப்படும் கல்வி தொடர்பான பாடல்கள் மற்றும் இசையுடன் கூடிய காட்சிகளை மகிழ்ச்சியுடன் கண்டு, ஆடி பாடி மகிழ்கின்றனர். இந்த ஸ்மார்ட் பிளஸ் பிளஸ் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், மேலும் ஊராட்சி ஒன்றியத்துக்கு தலா இருமையங்கள் என, 13 ஊராட்சி ஒன்றியங்களில் 26 அங்கன்வாடி மையங்களை, தனியார் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி மூலம் ஸ்மார்ட் பிளஸ் பிளஸ் அங்கன்வாடி மையங்களாக மாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வரு கிறோம்.

இதில், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தண்டலம், பிரயாங்குப்பம் மற்றும் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் 3 அங்கன்வாடி மையங்களை ஸ்மார்ட் பிளஸ் பிளஸ் அங்கன்வாடி மையங்களாக மாற்றும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்து மிக விரைவில், அந்த ஸ்மார்ட் பிளஸ் பிளஸ் அங்கன்வாடி மையங்கள் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்