கோவை: பிளஸ் 2, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிப் பதுடன், மென்பொறியாளர்களாகவும் ஆக்குகிறது "சோஹோ" கல்வி நிறுவனம்.
ஏராளமானோரின் வேலையின் மைக்கு வேலைக்குத் தேவையான திறன்கள் இல்லாததே காரணம். இந்த குறையைப் போக்குகிறது பிரபல மென்பொருள் நிறுவனமான 'சோஹோ'. இந்நிறுவனத்தின் கல்வி நிறுவனம், பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ முடித்த மாணவர்கள், மென்பொறியாளராவதற்கு தேவையான திறன்களை வழங்குகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் படிக்கும்போது ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளாக தங்கள் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது.
இதுதொடர்பாக சோஹோ கல்வி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி கூறியதாவது: "அனைவராலும் பொறியியல் பட்டப் படிப்புக்கான செலவு செய்ய இயலாது. எனவேதான், காஞ்சிபுரம் மாவட்டம் வல்லாஞ்சேரி, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் ‘சோஹோ' கல்வி நிறுவனங்களை தொடங்கினோம். இங்கு, மென்பொறி யாளர்களை உருவாக்க ‘சோஹோ ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி’, வரைகலை நிபுணர்களை உருவாக்க' ஸ்கூல் ஆஃப் டிசைன்’, சந்தைப்படுத்துதல், விற்பனை பிரிவில் திற மையானவர்களை உருவாக்க ‘ஸ்கூல் ஆஃப் பிசினஸ்' செயல்பட்டு வருகிறது. இந்த மூன்று பிரிவுகளில் இரண்டை ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு 'ஸ்கூல்ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடி' செயல் பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இங்கு சேர, பத்தாம் வகுப்புக்கு பிறகு 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு அல்லது பிளஸ் 2 முடித்த, படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் (17 வயது முதல் 20 வயது வரைஉள்ளவர்கள் மட்டும்) விண்ணப்பிக் கலாம்.
கணித அடிப்படையில்: நுழைவுத்தேர்வு, நேர்காணலுக்கு பிறகு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். பத்தாம் வகுப்பு கணிதத்தின் அடிப்படையில் இந்த தேர்வு இருக்கும். சென்னை, தென்காசியில் இந்தத் தேர்வு நடைபெறும். சோஹோ கல்வி நிறுவனத்தில் சேர விரும்பும் மாணவர்கள் என்ற இணையதளத்தில் தற்போதுவிண்ணப்பிக்கலாம். அக்டோபர் 15 மற்றும் டிசம்பர் 17-ம் தேதிகளில் தேர்வு நடைபெறும். தேர்வானவர்களுக்கான 2023 ஏப்ரல், மே மாதங்களில் பயிற்சி தொடங்கும்”.
» சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று மனித சங்கிலி: அமைதியாக நடத்த தலைவர்கள் வேண்டுகோள்
ஆண்டுக்கு ரூ.9 லட்சம் சம்பளம்: இரண்டு ஆண்டுகள் படித்தபிறகு கிடைக்கும் சம்பளம் குறித்து ராஜேந்திரனிடம் கேட்டதற்கு, "படிப்பு காலம் முடிந்தவுடன் மாணவர்கள் நேரடியாக சோஹோ பணியாளராக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சென்னை, தென்காசி, ரேணிகுண்டா, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் சோஹோ நிறுவன கிளைகள் உள்ளன. அங்கு அவர்கள் பணியாற்றலாம். அவர்களுக்கு தொடக்கத்தில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை சம்பளம் அளிக்கப்படுகிறது. சோஹோ நிறுவனத்தில் பணியாற்றும் 10-ல்ஒருவர், சோஹோ கல்வி நிறுவனத் தில் படித்தவர்கள் ஆவர். இதுவரை, 1,200-க்கும் மேற்பட்டோர் படிப்பைநிறைவு செய்து இவ்வாறு பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு ராஜேந்திரன் தண்டபாணி தெரிவித்தார்.
கட்டணம் ஏதும் இல்லை: சோஹோவில் 2 ஆண்டுகள் படிப்பு காலம் ஆகும். இதற்கு, எந்தவித கட்டணத்தையும் அவர்கள் பெறுவதில்லை. முதலாம் ஆண்டில்மாணவர்கள் சேர்ந்தவுடன் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இரண்டாம் ஆண்டில் 'இன்டெர்ன்ஷிப்' பயிற்சி காலத்தில், ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.15ஆயிரம் வழங்கப்படுகிறது. ஞாயிறு தவிர மற்ற நாட்களில் மூன்று வேளையும் உணவு, ஸ்நாக்ஸ் ஆகியவற்றை இலவசமாக அளிக்கின்றனர். இந்த கல்வி நிறுவனத்தில் சேர்ந்த முதல் நாளிலேயே ஒவ்வொருவருக்கும் தனி மடிக்கணினி அளிக்கப்படுகிறது. அதில், வாரத்தில் அனைத்து நாட்களிலும் இணையதள வசதியை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்குமிடம் மட்டும் அளிப்பதில்லை. அதுவும், முன்னாள் மாணவர்கள் உதவியுடன் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. ஆங்கிலத்தில் பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. ஆங்கிலத்தில் புரிந்துகொள்ள சிரமப்படும் மாணவர்களுக்கு, தமிழிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. படிக்கும் காலத்தில் மென்பொருள் உருவாக்குவதல் குறித்த பயிற்சி, ஆங்கிலத்தில் பேச, படிக்க, புரிந்துகொள்ள கற்றுத் தரப்படுவது சிறப்பு.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago