எண்ணும் எழுத்தும் வகுப்பைறயில் துணை கருவியாக செய்தித்தாள்

By செய்திப்பிரிவு

தொடக்கநிலை வகுப்பு மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை போக்கும் விதத்தில் மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு "எண்ணும் எழுத்தும்" திட்டம் நடைமுறையில் உள்ளது. 2025-க்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து 8 வயது குழந்தைகளும் எழுத்தறிவு எண்ணறிவை பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் இரண்டாம் பருவ ஆசிரியர் கையேட்டில் செய்தித்தாள் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

தொடக்கநிலை(1-5) வகுப்புக்களுக்கு இரண்டாம் பருவம் அக்டோபர் 13-ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க நிலை வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் குறித்த இரண்டாம் பருவ பயிற்சி 10-ம்தேதி முதல் 12-ம் தேதி வரை மூன்று நாட்கள் மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. எண்ணும் எழுத்தும் வகுப்பறை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பள்ளிகளில் காட்சியளிக்கிறது. கற்றல் நிலைக்கேற்ப பயிற்சி நூல், துணைக் கருவிகள், கற்றல் களங்கள், செயலி மூலம் மதிப்பீடு, விரைவுத்துலங்கள் குறியீடுகள் என்பதுடன் மாணவர்களை அரும்பு, மொட்டு, மலர் (நீலம், மஞ்சள், பச்சை) என்ற மூன்று நிலையில் அவர்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டிருப்பது சிறப்பு.

இந்நிலையில், தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களுக்கு ஆசிரியர் கையேடு வெளியாகி உள்ளது. கணக்கு பாடத்தில் எண்களை அறிவேன், காலம் அறிவேன், கூட்டல்,கழித்தலை அறிவேன் என்ற தலைப்பில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடங்களுக்கு மட்டும் 51 செயல்பாடுகள் உள்ளன. எழுத்துக்களும் சொற்களும் மாணவர்கள் மனங்களில் நன்கு பதியும் விதத்தில் அழகிய பாடல்கள்,கதைகள் மட்டுமின்றி, இதுவரைஎதுவரை, செய்தித்தாளில் வட்டமிடுவேன், சொல்லி அடிப்போம், நான் யார் தெரியுமா? சொடக்கு போட்டு சொல்வோம், எழுத்தில் விழுந்தால் சொற்குவளை விளையாட்டு, பூ எடுக்கலாம் சரம் தொடுக்கலாம், கண்டுபிடிப்போம் சொல்வோம் உள்ளிட்ட செயல்பாடுகள் மாணவர்களின் மனங்களை கவரும் விதத்தில் அழுத்தமாக அமைந்திருப்பது அருமை.

துணைக்கருவியாக செய்தித்தாள்: செய்தித்தாளில் எழுத்துக்களை வட்டமிடும் போது தெரிந்த படித்த எழுத்துக்களை குழந்தைகள் பார்த்து நினைவுபடுத்திக் கொள்கிறார்கள். எளிமையான பெயர்ச் சொற்களை அடையாளம் காண, சிறுவர்களுக்கான படைப்புகளை படித்தல், படைப்பாற்றலை தூண்டுதல், படக்கதைகள் வாசித்தல், பாடத்தோடு தொடர்பான படங்களை வெட்டி ஒட்டுதல், படித்து பொருளுணரும் திறனை அதிகப்படுத்துதல், படித்த தலைப்புகள் குறித்து குழுவில் கலந்துரையாடுதல், எழுத்துக்களை கொண்டு சொற்களை உருவாக்குதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

மேலும், செய்தித்தாளை வெட்டி துணைக் கருவியாக உருவாக்குதல், படங்களை சேகரித்து படத்தொகுப்பு உருவாக்குதல், செய்தித் தளை கிழித்து ஒட்டி உருவங்களை(Collage) உருவாக்குதல், இணை மற்றும் குழு செயல்பாடுகளில் ஈடுபட ஊக்குவிக்க, சொற் புத்தகம் உருவாக்குதல், எழுத்து விளையாட்டுகளில் ஈடுபட,முகமூடி செய்ய, கூழாக்கி கற்றல்பொருள்களை உருவாக்க இவ்வாறாகசெய்தித்தாள்களின் பயன்பாடு குறித்து சொல்லியிருப்பது புதுமையாகப் பார்க்கப்படுகிறது. எண்ணும் எழுத்தும் வகுப்பறை அனுபவங்களை ஆசிரியர்கள் பகிர டெலிகிராம் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இக்குழுவில் இணைந்துள்ளனர். ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 8 மணி வரை கலந்துரையாடல் நடைபெறுகிறது. - கட்டுரையாளர், ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி; அய்யம்பாளையம், ஆத்தூர் ஒன்றியம், திண்டுக்கல் மாவட்டம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்