மாணவர்களின் பார்வையை விசாலமாக்க புதிய முயற்சி: சினிமாவுக்குப் போலாமா நண்பர்களே

By செய்திப்பிரிவு

கல்லூரியை "கட்” அடித்துவிட்டு திரைப்படத்துக்குப் போகும் இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன். இப்போது அவர்களே பள்ளிக் குழந்தைகளைப் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு ஒரு செய்தி வந்திருக்கிறது.

ஆம். ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் 2 பாடவேளைகளில் திரைப்பட மன்றம் மூலமாக அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக் கூடங்களிலேயே திரைப்படங்கள் திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலத்திற்கேற்ற மாற்றம்தான்.

அரசு பள்ளிகளில் இனி திரைப்படங்கள் திரையிடப்படும் என்றால் மாணவர்களின் கல்விபாதிக்காதா? கல்விக்கூடங்களில் பொழுதுபோக்கு நிகழ்வுகள், அதுவும் மாதமொரு முறை அவசியம்தானா? சராசரியாக ஒன்றரை மணி நேரம் வெறும் திரைப்படங்கள் மட்டுமா காட்டப்படப் போகிறது என்றால் இல்லவே இல்லை.

கல்வி என்பது கற்றுக்கொள்வது. தான் கடந்து வரும் ஒவ்வொன்றிலும் கற்றுக்கொள்வது தான் குழந்தையின் குணம். உலகளாவிய குழந்தைத் திரைப்படங்களை மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டுவதால் மாணவர்களின் பார்வை விசாலமாகும்.

வெறும் திரைப்பட ஒளிபரப்பு மட்டுமின்றி அக்கதை, கதாபாத்திரங்கள், ஒப்புமை, அலசல், தன் கருத்துகளை தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்துதல் போன்ற எண்ணற்ற வாசல்கள் மாணவர்களின் மனதில் திறக்கும். இதற்கெல்லாம் பாடப்புத்தகங்கள் போதாதா என்றால் மாணவர்களின் சிந்தனைத்திறனைத் தூண்டுவதற்கு இதுவும் ஒரு முயற்சியே.

இதுபோன்ற திட்டங்களைச் சிறப்பாகவும் முனைப்பாகவும் செயல்படுத்துவதில்தான் நம் மாணவர்களின் சிந்தனைத் திறன், கருத்துகளை தயக்கமின்றி வெளிப்படுத்தும் திறன், மேடைப் பேச்சுத் திறன், விவாதித்தல், விமர்சனம் செய்தல், எதையும் சீர்தூக்கிப் பார்த்தல் போன்ற பல திறன்கள் மேம்படுகிறது.

இத்திரைப்பட மன்றம் மூலமாக ஒளிபரப்பப்படும் திரைப்படங்களைப் பார்த்து அதனைத் தொடர்ந்து நடத்தப்படும் செயல்பாடுகளில் பங்கேற்றுச் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் வெளி நாட்டுச் சுற்றுலாவும் உண்டாம்.

கற்பித்தலில் புதுமை என்பதைப் போல கற்றுக்கொள்ளும் முறையிலும் புதுமை வேண்டும். கற்றல் கற்பித்தல் கருவிகளைப் போல திரைப்படத்தையும் ஊடகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்தையும் நேர்மறையான சிந்தனையுடன் அணுக வேண்டியதன் அவசியத்தை நம் மாணவர்களுக்கு இதன்மூலம் கற்றுத்தரலாம்.

மாணவர்களே, நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் நாம் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது என நம்புங்கள். திரைப்படங்களை வெறும் காட்சி ஊடகமாகப் பார்ப்பதால் காட்சிகள் மட்டுமே மனதில் பதியும். அவற்றை உங்களுக்கான களமாக்கிக் கொள்ளுங்கள்.

கற்பித்தலில் பலவகை உண்டு. பள்ளிகளில் நாம் பார்க்கிறோம். திரைப்பட மன்றமும் ஏதோ ஒரு நன்மையைச் செய்யத்தான் போகிறது. பள்ளியின் வேலை நேரத்திலேயே 1.30 மணி நேரம் வழங்கப்படுகிறது என்றால் இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். இது அனைத்து மாணவர்களுக்கானதாக இருக்க வேண்டும். இதனால் ஒரு மாற்றம் மாணவர்களின் கற்றலில் நடைபெறும் என்று நம்பப்படுகிறது.

திரைப்படம் என்பது பொழுதுபோக்கிற்கானது என்ற கற்பிதத்தைத் தாண்டி இது ஒரு படைப்பாளியின் ஆக்கப்பூர்வமான முயற்சிஎன்ற மனப்பான்மை வளரும் தலை முறையினரிடையே விதைப்போம்.

இதனால், ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது அதை மாறுபட்ட கோணத்தில் அணுகவேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வர். மேலும், வளரிளம் பருவத்தினருக்கே உரிய திரைப்படத்தின் மீதான மோகம் ஆரோக்கியமான மாற்றம் பெற்று சிறந்த விமர்சகராகவோ ஒரு படைப்பாளியாகவோ மாறும் நிலை உருவாகும்.

மாணவர்களே, கண்களின் வழியேதான் பெரும்பாலான செய்திகள் மாணவர்களை வந்தடைவதாக அறிவியல் கூறுகிறது. முயன் றால் முடியாதது ஏதுமில்லை. வாருங்கள். கல்விசார் திறன்களைத் திரைப்படம் மூலம் நம் வசமாக்குவோம்.

கட்டுரையாளர், ஆசிரியை,

அரசு உயர்நிலைப் பள்ளி,

திருக்கண்டலம், திருவள்ளூர் மாவட்டம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்