ஆசிரியர் பணி என்பது சாதாரண பணி அல்ல. அது ஒரு மாபெரும் தொண்டு, மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களின் சேவைகளை நினைவு கூரும் நாளே ஆசிரியர் தினம்.
ஆசிரியராய் வாழ்வைத் தொடங்கி நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை பெருமைப்படுத்தும் விதமாக அவரதுபிறந்த நாளை நாடு முழுவதும்ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
அதுமட்டுமல்லாமல் மாநில மற்றும் தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருதுகள் அவரது பெயரிலே ஆசிரியர் தினத்தில் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. உலகிலே பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களை இடம் பெற செய்த நாடு நமது நாடு மட்டுமே.
இந்தியாவிலேயே இரண்டு ஆசிரியர்களை ஜனாதிபதி பதவி வரை உயர்த்தி அழகு பார்த்தது நமது தமிழகம் தான் என்பதை யாரும் மறக்க முடியாது. அதில் ஒருவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றொருவர் அப்துல்கலாம்.
ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்த உலகிற்கே காட்டியவர்கள் இவர்கள்.
உலகில் முன்னேறிய 10 நபர்களிடம் பேட்டி எடுத்தார்கள், “நீங்கள்இவ்வளவு உயர்வு பெற்றதன் காரணம் யார் என்று நினைக்கிறீர்கள்” என்றார்கள். அதற்கு 8 பேர் சொன்ன பதில் என்ன தெரியுமா? எங்கள் உயர்வுக்கு மிக முக்கிய காரணம் எங்களது ஆசிரியர்கள் தான் என்றனர்.
இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் அறிஞர் பேராசிரியர் சர்.சி.வி.ராமனுக்கு ஒரு அழைப்பு வந்தது, “உங்களை பாரத ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளோம், நாங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் நேரில் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்றார்கள். அதற்கு சர்.சி.வி.ராமன் சொன்னார், “அன்றைய தினம் என்னிடம் படிக்கும் மூன்று மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளார்கள். எனவே அன்றைய தினம் நான் அவர்களுடன் இருக்க வேண்டி உள்ளது” என்றார்.
ஒரு ஆசிரியரிடம் 10 மாணவர்கள் படித்து வந்தார்கள், அவர்களில் ஒரு மாணவர் திருடும் பழக்கம் உள்ளவர், ஏனைய ஒன்பது பேரும் அதை ஆசிரியரிடம் தெரிவித்தார்கள். மேலும் அந்த மாணவரை வகுப்பிலிருந்து அனுப்பிவிட வேண்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு ஆசிரியர் அந்த மாணவரை வகுப்பிலிருந்து அனுப்ப முடியாது என்று சொன்னார். ஏனைய ஒன்பது மாணவர்களும் அவரை அனுப்பவில்லை என்றால் நாங்கள் வகுப்பை விட்டு செல்கிறோம் என்றார்கள். அதற்கு ஆசிரியர் நீங்கள்தாராளமாக செல்லலாம் என்றார். திருடும் பழக்கம் உள்ள மாணவரை அனுப்பாமல் எங்களை அனுப்புகிறீர்களே என்றார்கள் மாணவர்கள்.
அதற்கு ஆசிரியர் நான் கற்றுக் கொடுத்த கல்வியின் மூலம் நீங்கள் எது நல்லது, எது கெட்டது என்பதை தெரிந்து கொண்டீர்கள். ஆனால் இந்த திருடும் பழக்கம் உள்ள மாணவர் இன்னும் கற்று கொள்ளவில்லை. எனவே தான் அவரை அனுப்பமுடியாது. அவர் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது, அப்போது தான் எது நல்லது எது கெட்டது என்பதை உணர்ந்து தவறை திருத்திக் கொள்வார்கள் என்றார்.
ஆசிரியர்கள் பலமான வேர்களை போன்றவர்கள், மாணவர்கள் பூக்களை போன்றவர்கள். வேர்களுடைய பலத்தை பொருத்தே பூக்களின் வசீகரம் அமையும்.
ஆசிரியர் பணி என்பது வேலை அல்ல அது ஒரு சேவை.
நேர்மறை எண்ணங்கள்
மாணவர்களின் மனதில் எப்போதும் நேர்மறை எண்ணங்களைஏற்படுத்தி உற்சாகப்படுத்துபவராக வும், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துபவராகவும் இருத்தல் வேண்டும்.
ஆசிரியர் பணி என்பது வேலைக்கு செல்வதற்கு மாணவர்களை தயார்படுத்தும் பணி அல்ல. ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து ஒழுக்கமுடைய திறமை மற்றும் சமூக அக்கறை உடைய நல்ல குடிமக்களை உருவாக்கும் மகத்தான பணியாக இருப்பதால் ஆசிரியர் பணி மகத்தானது என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர்
முதல்வர்
செண்டு பொறியியல் கல்லூரி.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago