சிறார் கதைகள் | கஞ்சராஜாவின் கணக்கு!

By செய்திப்பிரிவு

கணிதத்தின் உதவியால் இவ்வுலகத்தையே அறியலாம் என்பார் கலிலியோ. எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் என்று வள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார்.

மனித வாழ்க்கையில் கணக்கில்லாமல் இருக்கவே முடியாது. நம் வாழ்வோடு இரண்டற கலந்துள்ளது கணக்கு. இந்தக் கணிதத்தை நாம் மகிழ்ச்சியோடு தான் கற்கின்றோமா என்றால் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்று வரும். ஏனென்றால் சிறு வயதில் கணிதப்பாடத்தில் நமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஆகும்.

பள்ளியில் கணிதப்பாடம் இல்லாத பிரிவைத் தேர்ந்தெடுப்பது, கல்லூரியில் கணிதமே இல்லாத துறையைத் தேர்ந்தெடுப் பதற்கெல்லாம் காரணம் கணிதத்தை மாணவர்களுக்கு அவர்களுக்குப் புரிகின்ற மாதிரி நடத்தாமல் இருந்தது. பாரதி கூட அவர் தந்தையிடம் கணிதம் பயின்ற போது தனக்கு கணக்கு வராது என்பதைக் ”கணக்கு பிணக்கு மணக்கு ஆமணக்கு” என்று கவிதையாக எழுதிவைத்து சென்று விட்டாராம்.

கணக்கைப் பார்த்தால் மட்டும் மாணவர்களுக்கு பயம் வருவது அதிர்ச்சியாக உள்ளது. எப்படியாவது தேர்ச்சி அடைந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.

குழந்தைகளுக்குக் கதை சொல்வது இயல் பானது. அதுவே கணக்கை கதையோடு சேர்த்து சொல்வது அவர்களுக்கு இன்னும் எளிமையாக புரிய வைக்கச் செய்யும் முயற்சி அல்லது அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டுவது எனலாம். அத்தகையதொரு பணியைத்தான் எழுத்தாளர் உதயசங்கர் தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளின் வழியாக குழந்தைகளுக்குக் கணிதத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்.

கயிற்றின் நீளம்: சரவணனுக்குப் பட்டம் விட வேண்டுமென்ற ஆசையில் அழகான பட்டம் செய்கிறான். வீட்டில் நூல்கண்டைத் தேடிப்பார்க்கிறான். நூல் துண்டுதான் இருக்கிறது. அம்மாவிடம் போய் கேட்கிறான். ‘‘அம்மாவோ நூல்கண்டில் பாதியைப் பார்சல் கட்ட அண்ணன் எடுத்துக் கொண்டான் என்கிறார்.

அதிலே பாதியை பூக்கட்ட வேணும்னு நானும் எடுத்துகிட்டேன். மீதி இருந்ததில் பாதியை அப்பா எடுத்தார். அக்காகூட அதிலே ஐந்தில் இரண்டு பாகம் வெட்டி எடுத்துக்கிட்டாள், மீதி நிறைய இருக்குமே என்கிறாள்”.

எங்கே இருக்கு… 60 செ.மீ தான் இருக்கு. அத வச்சி பட்டம் விட முடியுமா? என்கிறான்.

அம்மா சிரித்துக்கொண்டே கேட்டாள்.

‘‘அப்படின்னா நூல்கண்டில எவ்வளவு நீளம் இருந்துச்சி சரவணா?”

பதிலை நீங்களும் கண்டுபிடியுங்கள் என்று சொல்லி பதிலையும் கொடுத்துள்ளார்.

திட்ட வட்டம்: கார்த்தியின் அப்பாவும் தாத்தாவும் ஒரே மில்லில் வேலை பார்த்தார்கள். அவர்களுடைய ஊரிலிருந்து இரண்டுபேரும் ஓரே நேரத்தில் புறப்பட்டால் அப்பா இருபது நிமிடத்தில் போய்ச் சேருவார்.

தாத்தா முப்பது நிமிடங்களில் போய்ச் சேருவார்? ஒரே நேரத்தில் இருவரும் போய்ச்சேர வேண்டுமென்றால் தாத்தா பத்து நிமிடம் முன்னால் புறப்பட வேண்டும். அப்பா பத்து நிமிடம் கழித்து புறப்பட்டு செல்வார்.

ஆனால் இன்று தாத்தா செல்வதற்குச் சற்று தாமதாகி விட்டது. பத்து நிமிடங்களுக்கு முன்னால் புறப்பட முடியவில்லை . அதனால் ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் தான் புறப்பட்டார். ஆனால் அப்பா எப்போதும் போல் சரியான நேரத்தில் புறப்பட்டு விட்டார். இங்கு கேள்வி அப்பா எப்போது தாத்தாவை எட்டிப்பிடிப்பார்?

சிந்தியுங்கள். இதுபோன்ற எளிமையான அன்றாட வாழ்வியலில் பயன்படுத்தும் கணக்கு களைப் புத்தகத்தில் பார்க்கலாம். இந்நூல் கணிதத்தை எளிமைப்படுத்துவது மற்றும் குழந்தைகள் விரும்பும் ஒன்றாக கணிதத்தை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

கட்டுரையாளர்:முதுகலைத் தமிழாசிரியை, அரசு மேல்நிலைப் பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூர் மாவட்டம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

7 hours ago

வெற்றிக் கொடி

7 hours ago

வெற்றிக் கொடி

7 hours ago

வெற்றிக் கொடி

7 hours ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

28 days ago

மேலும்