அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு அடுத்த மாதம் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்கிறார் ஆசிரியை மீனாட்சி.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வை (National Means cum Merit Scholarship) எட்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர் எழுதலாம். இதில் தேர்ச்சி பெற்றால் உதவித்தொகை பெற தகுதியுடையவர் ஆவர்.
இத்திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் ஆண்டிற்கு ரூ. 12,000 என நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 48,000 உதவித் தொகை கிடைக்கும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டுமே 9 முதல் 12 வகுப்புகள் வரை கல்வியைத் தொடர வேண்டும். தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் இதனைப் பெற முடியாது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
9 முதல் 12 வகுப்பு வரை இடைநிற்றலோ தேர்ச்சி அடையாமலோ இருக்கக்கூடாது. மத்திய அரசின் வேறு எந்த உதவித்தொகையும் பெறுபவராக இருக்கக்கூடாது. தனக்கென வங்கிக்கணக்கு எண், ஆதார் அட்டை, பெற்றோரின் அலைபேசி எண் போன்றவற்றை வைத்திருக்கவேண்டும்.
பெற்றோரின் அலைபேசி எண்ணிற்கு OTP அல்லது குறுஞ்செய்திகள் வரும் என்பதால் தன் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள காலத்தில் அந்த அலைபேசி எண்ணை அவசியம் பராமரிக்க வேண்டும். உதவித்தொகை மாணவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும்.
தலைமை ஆசிரியருக்கோ அல்லது வேறு எந்த அலுவலருக்கோ இது குறித்த செய்திகளை பகிரக்கூடாது. தன்னுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் எவ்வாறு பெயர் வர வேண்டுமோ அவ்வாறு எட்டாம் வகுப்பு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விற்கு அரசு தேர்வுத்துறை இயக்கக இணையதளம் (DGE portal) விண்ணப்பிக்கும் போதே பெயரை உள்ளீடு செய்ய வேண்டும்.
இதனால் பத்தாவது Nominal Roll தயார் செய்யும் போது எந்த மாற்றமும் செய்யத் தேவையிருக்காது. (ஆதாரில் இரண்டு முறை மட்டுமே பெயரை மாற்றம் செய்ய இயலும்).
ஆதார் அட்டையில் உள்ள பெயரும் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSPPortal) ஒன்பதாம் வகுப்பில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போது உள்ள பெயரும் பொருந்தியிருக்க வேண்டும்.
எனவே, அரசு தேர்வுத் துறை இயக்கக இணையதள விண்ணப்பம், ஆதார் அட்டை, பத்தாவது மதிப்பெண் சான்று மற்றும் தேசிய கல்வி உதவித் தொகை இணையதளம் ஆகிய நான்கிலும் ஒரே மாதிரியான, சரியான பெயரை Spelling, முகப்பெழுத்து மற்றும் இடைவெளிகளுடன் உள்ளீடு செய்யவேண்டும்.
தகுதி பெற்ற ஒவ்வொரு மாணவரும் தன் ஒன்பதாம் வகுப்பில்தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் புதிதாக விண்ணப்பித்தல் மற்றும் 10, 11, 12-ம் வகுப்புகளில் புதுப்பித்தலை மேற்கண்ட இணையதளத்தில் தொடர்ந்துசெய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒன்றரை மாதங்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மாணவர்களின் பயன்பாட்டுக்காக திறந்திருக்கும்.
தகுதி பெற்ற மாணவர்களின் விவரங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பிவைக்கப்படும். பட்டியலில் உள்ள மாணவர்கள் தங்கள் விவரங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவு செய்து User ID மற்றும் Passwordபெறலாம். இவற்றைப் பயன்படுத்தி என்எம்எம்எஸ் உதவித் தொகைக்குவிண்ணப்பிக்கவேண்டும்.
ஆதார் அட்டையில் எந்த தகவலேனும் பொருந்தாமல் இருந்தால் உங்கள் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலகத்தில் உள்ள உரிய அலுவலரை அணுகி தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். புதிதாக விண்ணப்பிக்கும் போது மாணவர் படிக்கும் மாவட்டத்தைத்தான் குறிப்பிட வேண்டும். தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ம் தேதி வரை திறந்திருக்கும்.
இவ்வாறு ஆசிரியை மீனாட்சி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago