சீருடையில் இருந்து பெண் குழந்தைகளின் சுதந்திரம் தொடங்கட்டும்!

By செய்திப்பிரிவு

முதன்முதலில் பள்ளிச் சீருடையை அறிமுகப்படுத்திய நாடு இங்கிலாந்து. 16-ம் நூற்றாண்டில் கிறிஸ்ட் மருத்துவமனை பள்ளி நீலநிறத்தில் நீண்ட அங்கியும், மஞ்சள் நிற கால்சட்டையும் அறிமுகப்படுத்தியது. "நாம் அனைவரும் சமம்" என்பதை அறிவிப்பதே சீருடையின் நோக்கம்.

அரசு பள்ளி மாணவிகளின் சுடிதார் வெளிர் நிறத்தில் இருக்கிறது. 6-8 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வெளிர் சந்தன நிறம், 9, 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வெளிர் பிங்க் நிறம் மற்றும் 11, 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வெள்ளை கலந்த ஊதா நிறத்திலும் உள்ளன.

ஆண்டிற்கு 210 நாட்கள் சீருடை அணிய வேண்டும். அதனால் அந்தச் சீருடை வசதியாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

மாணவிகளின் விருப்பம்

பொதுவாக மாதவிடாய் நேரத்தில் அடர்நிற ஆடைகள் அணிவதையே பெண்கள் விரும்புவார்கள். வெளிர்நிற சீருடை பெரும் தொந்த ரவு தரக்கூடியது என் மாணவிகள் பலரும் கூறினர். அந்தநேரத்தில் நாள் முழுவதும் பதற்றத்துடன் கடப்பதாகவும் கூறினர்.

அதிலும் இப்போது சிறுவயதிலே பருவ மெய்திய பெண்குழந்தைகள் படும்பாடு வார்த்தையில் சொல்ல முடியாது. சீருடையில் மாதவிடாய் கறைபட்டதுகூடத் தெரியாமல் அதைக் கையாளவும் தடுமாறுகிறார்கள்.

மாதவிடாய் நேரத்தில் பேருந்தில் பயணம் செய்யும் மாணவிகளின் நிலை இன்னும் சங்கடத்திற்குரியது.

வெளிர்நிற பள்ளிச் சீருடை பெண் குழந்தைகளுக்கு ஏற்றதா?

ஒரு பெண் குழந்தையோ அல்லது பெண் ஆசிரியரோ வெள்ளை, வெளிர் நிற ஆடைகள் அணிவதில் உள்ள சிக்கல்களை தங்கள் நிர்வாகத்திடம் சொல்வதற்கான வாய்ப்பு இங்கு இருக்கிறதா?

இன்றும்கூட பாரம்பரியமிக்க பல பள்ளிகள் தாவணி, பாவாடையை சீருடையாக வைத் துள்ளனர். தாவணி மிகச் சிக்கலான உடை. சைக்கிளில் செல்லும் போது பாவாடை கம்பியில் மாட்டி கிழியும் அபாயம் உள்ளது. விளையாட, பயணம் செய்ய பொருத்தமற்ற ஆடை அது.

அதே பள்ளிகளில் படிக்கும் ஆண் குழந்தைகளுக்கு சட்டை, கால்சட்டை. பெண் குழந்தைகளுக்கான ஆடையில் குடும்பம், கலாச்சாரம், ஒழுக்கம் எல்லாம் வந்து ஒட்டிக் கொள்கின்றன.

சீருடையை தேர்ந்தெடுக்கும் குழு

பெண் குழந்தைகளுக்கான சீருடையைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் பெண்கள் இருக்கி றார்களா? இல்லை. அங்கும் ஆண்களே ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்?

2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஹெய்லி ஜான்ஸ்டன் மற்றும் கெளட்ஸ் இருவரும் ஒரு தனியார் பள்ளியின் சீருடை குறித்து ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வின் முடிவில் 55 சதவீதம் பெண் குழந்தைகள் தங்களின் குளிர்கால சீருடை வசதியாக இல்லை எனவும், விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதே போல் ஏன் நம் நாட்டில் பள்ளிச் சீருடை அறிமுகப்படுத்தும்போது அதை அணிவது குறித்த சிக்கல்கள் மற்றும் வசதிகளை ஆய்வு செய்வதில்லை? பெண் குழந்தைகளிடம் ஏன் கருத்து கேட்பதில்லை?

சமீபத்தில் கேரளா அரசுப் பள்ளிகளில் இருபாலருக்கான ஆடையாக சட்டை, கால்சட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இந் நகர்வு பலராலும் கொண்டாடப்பட்டது.

அரசாணை தேவை

ஆண் ஆசிரியர்கள் காலத்திற்கேற்ப தங்கள் ஆடையை மாற்ற எவ்வித அரசாணையும் தேவைப்படவில்லை. பெண் ஆசிரியர்கள் பாரம்பரிய சேலையை ஒதுக்கி, தங்களுக்கு வசதியான சுடிதாரில் வர முறையான அரசாணை தேவைப்படுகிறது .

ஆடை என்பது வெறும் ஆடை இல்லை.இந்த பின்நவீனத்துவ காலத்திலும் பெண் களுக்கு தங்கள் ஆடை குறித்த கவனம் மூளைக்குள் எப்போதும் இருக்கும்படி நம் சமூகம் பார்த்துக் கொள்கிறது.

பெண் குழந்தைகளுக்கான சுதந்திரத்தை அவர்கள் பள்ளிச் சீருடையில் இருந்து தொடங்க வேண்டியது அவசியம்.

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்