கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு அருகே உள்ள கதவணிபுதூர் கிராமத்தைச் சுற்றிமயிலாடுபாறை, எம்ஜிஆர் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள் தங்களது அன்றாட தேவை மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் காரப்பட்டு, ஊத்தங்கரை பகுதிக்கு தினசரி செல்கின்றனர்.
காரப்பட்டுக்கு போகும் சாலையில் பாம்பாறு செல்கிறது. மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது இந்த சாலை துண்டிக்கப்படும். அப்போது கிராமத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் சுற்றித்தான் காரப்பட்டுக்கு செல்ல வேண்டும்.
இந்நிலையில், கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் பாம்பாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வழக்கம்போல, ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.
இதனால், விவசாயிகள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உயர்மட்ட பாலம் அமைக்க வேண் டும் என்று பொதுமக்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago