ஒன்பதாம் வகுப்பு படிக்கும் எனக்கு திடீரென ஒரு நாள் படிப்பில் கவனம் சிதறியது. காரணம் எனது கண்மணி. அவள் எனது பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவி. ரெட்டை சடை பின்னலுடன், சீருடை அணிந்தே, அவள் எம் பள்ளியில் பவனி வரும் போது, என்னுள் ஏதோ கிளர்ச்சி ஏற்பட தொடங்கியதை நான் உணர்ந்தேன்.
என் கண்மணி, புத்தக சுமையை சுமக்கும் போது, அவளுக்கு வலிக்கிறதோ இல்லையோ, ஏனோ என் மனம் வலிக்கிறது. இது தான் காதலா? தோள் கொடுப்பான் தோழன் என்பார்களே. என் கண்மணிக்கு நான் தோள் கொடுக்க தயார். அவள் என்னை ஏற்றுக் கொள்வாளா?
அன்று வழக்கம் போல் பள்ளி விட்டதும் பேருந்தில் எனது பயணம். நான் ஓடும் பேருந்தின் படிக்கட்டில் நின்றிருக்க, பேருந்தின் உள்ளே இருந்தவர்களை என் கண்கள் ஊடுருவத் தொடங்கியது. இதோ! என் கழுகுப் பார்வையில் அவள் தெரியவே, நிம்மதியாய் பெருமூச்சு விட்டேன். டேய்! படிக்கட்டுல யாரும் நிக்காதிங்க! என கத்தினார் நடத்துனர்.
யாருக்கு நல்லது: ஏய்.. பாப்பா! வழியை விட்டுமுன்னாடி நகர்ந்து போ! அதுதான் எல்லோருக்கும் நல்லது என பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்த என் கண்மணியை பார்த்தும் கத்தினார். அவள் எப்படி நகர்வாள்? அவள் முன்னால்நகர்ந்தால் யாருக்கு நல்லது? அவளை வேண்டுமென்றே இடித்துக் கொண்டே வருகின்றானே அந்த கயவனுக்கா? என அந்த நடத்துனரை பார்த்து கேட்க தோன்றியது எனக்கு.
» வாராணசி வியாஸ் மண்டபத்தில் தினசரி பூஜைக்கு தடை விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுப்பு
» பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்: கொல்கத்தா உயர் நீதிமன்றம்
சிறுமி என்று கூட பார்க்காமல் அவளை தன் உடலால் உரசி சந்தோஷப்படும் அந்த காமுகனை ஓங்கி அறையலாமா? என உள்ளம் துடித்தது. அவளோ கெஞ்சும் குரலில், ப்ளீஸ் !அங்கிள்! எனக்கு கொஞ்சம் வழியை விடுங்க! என பாவமாய் கேட்க, ஆனால் அவனோ அதை காதில் வாங்காமல் தனது கால்களால் அவளது கால்களை வருட ஆரம்பித்தான்.
தொற்றுநோய்க்கு பயந்து... சட்டென்று எனக்குள் ஒரு யோசனை எழுந்தது. நானோ அவனது அருகில் சென்று சத்தமாய், அவனது முகத்திற்கு நேராக லொக் லொக்கென விடாமல் இரும ஆரம்பித்தேன். அவனோ நோய்க்கு பயந்தவன் போலும். அவசரமாய் சட்டை பையில் வைத்திருந்த முகக் கவசத்தை மாட்டிக் கொண்டு, நாலு அடி முன்னால் நகர்ந்தான்.
நானும் அவன் மேல் இருமியபடி பின் தொடர்ந்தேன். தொற்றும் நோய்க்கு பயந்த அவனோ, சட்டென பேருந்தை விட்டு இறங்கினான். நான் அவளை திரும்பிப் பார்த்தேன். கண்மணியின் கள்ள கபடமற்ற முகத்தில் நன்றியுடன் புன்னகை. படிக்கும் வயதில் அந்த சிறுமிக்கு அந்த மனிதன் உடலளவில் தொந்தரவு கொடுப்பதைப் போல் நானும் காதலெனும் வலையை வீசி, மனதளவில் தொந்தரவு செய்தால்?
அந்த நயவஞ்சகனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? என என் மனசாட்சி என்னை கேட்டது. அவளது படிப்புக்கு தடை இல்லாமல் நானும் அவளுக்கு வழிவிட எண்ணினேன். நான் திரும்பி அவளைப் பார்த்த போது, ப்ளீஸ்!அண்ணா! எனக்கு வழி விடுங்கள்! என்று அவள் என்னை கெஞ்சுவது போல் தோன்றியது. என் கண்மணியின் படிப்புக்கு நானும்இனி தடையல்ல என எண்ணி சட்டென பஸ்சை விட்டு இறங்கினேன்.
- கட்டுரையாளர் எழுத்தாளர் ஆவடி, சென்னை
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago