உயிருள்ள ஹெலிகாப்டர்

By காமாட்சி ஷியாம்சுந்தர்

மழைக்காலம் ஆரம்பித்த உடனேயே நம் கண்களில் தென்படும் பூச்சிகள் தட்டானும், ஈசலும் தான். எங்களது பள்ளி வளாகத்தில் பறந்த தட்டான் பூச்சிகளை பார்த்தவுடனேயே சிறு வயது நினைவு வந்தது. 30 வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த தட்டான்களின் எண்ணிக்கைக்கும் இப்போத பார்க்கும் தட்டான்களின் எண்ணிக்கைக்கும் இமாலய வித்தியாசம் என்றே தோன்றுகிறது. “தட்டான் கிட்டப்பறந்தால் எட்ட மழை, எட்ட பறந்தால் கிட்ட மழை” என்றொரு பழமொழிகூட உள்ளது. அருகிவரும் தட்டானை பார்த்தவுடன் அதனைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்ற ஆர்வம் மிகுதியில் உருவானதே இக்கட்டுரை. தட்டான் பூச்சிகளை பற்றி நான் படித்து தெரிந்து கொண்டவற்றில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உலகில் சுமார் 6,000 வகை தட்டான்கள் உள்ளன. அதில் 536 வகை தட்டான்கள் இந்தியாவில் இருப்பதாக அறிவியலாளர்கள் கருது கின்றனர். சங்க இலக்கியங்களில் ‘தும்பி’ என்று குறிப்பிடப்படும் பூச்சி இனங்களே இப்போது நாம் கூறும் தட்டான் பூச்சிகள். இவை பொதுவாக நீர் நிலைகளின் அருகிலும் திறந்த வெளியிலும் சுற்றித் திரிபவை.

சுற்றுச்சூழல் நண்பன்: நன்னீர்களே இவற்றின் பொது வான வாழிடங்கள். இவை சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நண்ப னாகவும் இருக்கின்றன. ஈ, கொசு, கொசுவின் லார்வா தலைப்பிரட்டை இவையே இவற்றின் உணவு. தட்டானின் உடல் அமைப்பே மிகவித்தியாசமான ஒன்று. தட்டானு டைய முதுகின் மேற்புறம் நான்கு இறக்கைகள் தனித்தனியாக அசையும் வகையில் உறுதியான தசைகளு டன் பிணைக்கப்பட்டு இருக்கும்.

இவற்றின் இறக்கையில் பார்ப்ப தற்கு கண்ணைக் கவரும் வகையில் ஒளி ஊடுருவும் தன்மையுடன் அமைந்துள்ளன. சில தட்டான்களின் இறக்கையில் இருக்கும் நிறங்கள் சூரிய ஒளியில் தகதகவென மின்னும் பண்பு கொண்டவை. பெரும்பாலும் ஆணின் இறக்கையிலேயே இத் தகைய நிறங்கள் இருக்கும். பெண் தட்டான்களை கவர்வதற்கும், எதிரிகளை எச்சரிப்பதற்கும் இவை பயன்படுகின்றன.

இரண்டு கூட்டு கண்கள்: மனித இனம் மற்றும் முதுகெலும் புள்ள விலங்குகளுக்கு கண்களில் ஒரே ஒரு “லென்சும்” விழித் திறையிலே பல கோடி பார்வை நரம்பு செல்களும் உள்ளன. ஆனால், பூச்சி இனங்களில் இதற்கு நேர் மாறாக உள்ளது. பூச்சியினங்களுக்கு இரண்டு கூட்டுக்கண்கள் உள்ளன.

ஒவ்வொரு கூட்டுக்கண்ணும் பல நூற்றுக்கணக்கான சிறுசிறு அலகுகளால் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிறிய அலகிற்கு ‘ஒமேடேடியம்’ என்ற பெயர். இந்த சிறிய அலகு நம் கண்ணைப் போலவே செயல்படுகிறது இதன்மூலம் பல திசைகளிலும் நடக் கும் விஷயங்களை பார்க்க முடியும் .

இவை முட்டையிடுவது நீரில்தான். இவற்றின் லார்வா நீருக்கடியில் வாழ்கிறது. பல்வேறு லார்வா பருவங்களின் முடிவில் வரும் இன்ஸ்டார் பருவத்தில் இவை நீருக்கு அருகில் உள்ள செடிகளில், பாறைகளில் அல்லது நீரிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் குச்சிகளின் மேல் நோக்கி நகர்ந்து தமது மேலுரையை கிழித்துக்கொண்டு உள்ளிருந்து முதிர்ந்த தட்டான்களாக வெளியே வருகின்றன.

“பறவையைக் கண்டான்

விமானம் படைத்தான்!

தட்டானை கண்டு தான்!

ஹெலிகாப்டர் படைத்தானோ”?.

- கட்டுரையாளர்தலைமை ஆசிரியர், பல்லோட்டிமேல்நிலைப்பள்ளி, நாகமலை, மதுரை மாவட்டம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE