கதை எனும் கல்வி

By ம.பரிமளா தேவி

எங்கள் சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளி பல எழுத்தாளர்களை அழைத்து வந்து ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் பல கதைகளை பேசி வருகிறது. காரணம் கதை தான் கல்வி. கதை தான் வாழ்க்கை என்று நம்புகிறது பள்ளி. ஒரே ஒரு ஊரிலே என்ற சொற்களை கேட்காமல் வளர்ந்து இருக்கிறோமா? நாம் சின்னப்பிள்ளையாக இருக்கும்போது நமக்கு வேறு வேலை இல்லங்க… அதனால் கதையெல்லாம் கேட்போம். இப்ப அப்படியா? எழுந்ததிலிருந்து படுக்கிற வரைக்கும் நமக்கு எவ்வளவோ வேலை. கதையெல் லாம் கேட்பதற்கு நமக்கு நேரம் இருக்கா? என்று கேட்கிறார்கள்.

தொலைக்காட்சி தொடர்: கடந்த 20 ஆண்டுகளாக நம்எல்லோருடைய வீட்டின் தொலைக் காட்சிகளிலும் நெடுந்தொடர் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த தொடரில் இன்னொருவரின் கதையைத்தானே பெரியவர்களாகிய நாம் பார்க்கிறோம். இன்னும் சொல்லப் போனால் நமக்கு கிடைக் கும்நேரத்தில் எல்லாம் இணையதளங் களில் நம்அலைபேசிகளில் இன்னொருவரின் கதையை பார்க்கா மல்இருக்கிறோமா? கதைகளை நம்பிமிகப்பெரிய வணிகசந்தை உருவாகி விட்டது. பலரின் வாழ்வாதார மாக கதைகள் மாறிவிட்டன. இப்படிப்பட்ட பண்பாட்டு மாற்றத்தை கதைகள் சமூகத்தில் உருவாக்கி இருக்கின்றன என்றால் இதனை படிக்க வேண்டாமா?

வாழ்வில் கலந்த கதைகள்: புத்தக வடிவில், ஒலிவடிவில், காட்சி வடிவில் என்று அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவிகொண்டு கதைகள் நம் வாழ்வில் கலந்துவிட்டன. வாழ்க்கை என்பது ரத்தமும் சதையும் உயிர்ப்பு மிக்க கதைதான். மனித உயிர்கள் தோன்றி 5000 ஆண்டுகளில் எந்தமனிதனும் அனுப்பவிக்காத ஒரு துயரத்தையோ மகிழ்ச் சியோ, சங்கடத்தையோ, கோபத்தையோ, அருவருப் பையோ,வலியையோ நாம் அனுபவித்ததைவிட முடியாத என்பதை கதைகள்தான் உணர்த்துகின்றன.

வாழ்க்கையை புரிவதற்கு... நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒரு மனிதனின் வாழ்க்கை கதை தான் இன்னொரு மனிதனுக்கு பாடம். கி. ராஜநாராயணின் ‘கதவு‘ கதையை படித்தால் விவசாய குடும்பத்தின் வறுமைச்சூழல் புரியும். வண்ணநிலவலின் ‘கடல் புறத்தில்‘ படிக்கும் போது மீனவக்குடும்பத்தின் பிரி வும், துயரும் புரியும்.

உணரப்படும் வறுமை: அசோகமித்திரனின் ‘புலிக்கலை ஞனின்’ கம்பீரமுகமூடிக்கு பின்னால் நிரந் தரமாக குடிகொண்டிருக்கும் வறுமையும், இயலாமையையும் உணர்வோம். சிங்கிஸ் ஐக்மாத்தவின் ஜமீலா, ரஷ்யா வின் கூட்டுப்பண்ணை வாழ்க்கை முறையை உணர்த்தும். நாடு கடந்து, கண்டம் கடந்து மனிதர்களை புரிந்து கொள்ள கதை தேவை.

"ஒரு ஊருல ஒரு பாட்டி வடைசுட்டுச்சாம்" என்ற கதை எத்தனை காலமாக நம் சமூகத்தில் உலாவுகின்றது என்ற கதையைக் கொண்டே மாணவர்களிடம் பல கேள்விகளைக் கேட்கலாம். இந்தக்கதைக்கு வயது என்ன இருக்கும்? இன்னும் ஏன் அந்தகதையை சொல்லிக் கொண்டே இருக்கிறோம்? காலம் காலமாக வயது முதிர்ந்து பாட்டியானாலும், பெண்தான் அடுப்பு நெருப்பில்வடை சுட்டுக்கொண்டே இருக்கவேண்டுமா?

யார் எழுத வேண்டும்? - எத்தனை நூறு ஆண்டு களானாலும் சுடும் எண்ணெய்யில் வெந்து கொண்டேஇருப்பது வடையா? பெண்ணா? போன்ற கேள்வி களை, சிந்தனைகளை எழுப்பஇயலுமல்லவா? துருக்கி நில நடுக்கத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை காப்பாற்றியதை நம் மாணவர்கள் கதையாக எழுத வேண்டாமா? இந்நிகழ்வை பாடமாக கல்வியில் சேர்க்க வேண்டாமா?

மனித மனங்களில் பூட்டி பொத்தி வைத்திருக்கும் கருணையையும், இரக்கத் தையும் கதைகள் மூலமாக நாம் திறந்துவிட முடியும். கதை வடிவில் நாம் மாண வர்களிடம் மனித வாழ்வை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். கதைகளை பள்ளியும் வகுப்பறை களும் கல்வி நிறுவனங்களும் எழுத வேண்டும். எழுத்தாளர் பாஸ்கர் சக்தி மாணவர்களிடம் சொல்லுவார், ‘யாரெனும்‘ என்ன கதை புத்தகமாக படிக்கிற? என்று கேட்டால் ஆம், கதை புத்தகங்கள் வழியாக வாழ்க்கையைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லுங்கள்’என்பார்.

- கட்டுரையாளர் தமிழாசிரியர், எஸ்.ஆர்.வி.மெட்ரிக் மே.நி. பள்ளி, சமயபுரம், திருச்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

7 hours ago

வெற்றிக் கொடி

7 hours ago

வெற்றிக் கொடி

7 hours ago

வெற்றிக் கொடி

7 hours ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

28 days ago

மேலும்