மெழுகுவர்த்தி உருவானது எப்படி?

By ஸ்ரீ. பாக்யலஷ்மி ராம்குமார்

சங்ககாலம் முதல் இடைக்காலம் வரை இந்தியாவில் குச்சிகள் கொண்டு தீ மூட்டி இரவுகளில் ஒளி ஏற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இடைக்கால இந்தியா முதல் இன்று வரை பல கிராமங்களில் மின்சாரம் சரியாக இல்லை என்றால் உடனடியாக வீட்டின் ஒளிக்காக மண்ணெண்ணை ஆங்கிலத்தில் கெரோசின் (kerosene) என்று கூறுவார்கள். இந்த எண்ணெயை கண்ணாடி புட்டிகளில் ஊற்றி, அதன் மூடியில் பழைய துணியை கிழித்து பற்ற வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பாக சுமார் கிமு.221-206 காலத்திலேயே சீனாவில்திமிங்கலக் கொழுப்பிலிருந்து மெழுகுவரத்தி தயாரிக்கப்பட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது, சீனா வழியாக மெழுகுவர்த்தி இந்தியாவிற்கு வந்ததாக “பி.கே.கோடே- ஹிஸ்டரி ஆஃப் வேக்ஸ்-கேண்டில்ஸ் இன் இந்தியா” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். ரோமானியர்களால் கிமு 1000 -ல் மெழுகுவர்த்திகள் தயாரிக்கப்பட்டன. 1920-ல் இந்தோனேசியாவில் மெழுகுவர்த்தி வார்ப்பு இயந்திரம் செய்யப்பட்டது.

மெழுகுவர்த்தி எரிவது எப்படி? - மெழுகின் நடுவே உள்ள திரி மீது பற்றவைக்கப்படும். நெருப்பு பற்ற வைத்ததும் அருகில் உள்ளமெழுகு இளகி திரி எரிய ஆரம்பிக்கும் இதன் மூலம் ஒளிச்சுடர் பிறக்கிறது. இந்த சுடர் மெல்ல ஆவியாக ஆரம்பித்து வளி மண்டலத்தில் உள்ள உயிரி வாயுவோடு சேர்ந்து ஒளி வீச தொடங்கும்.

இந்த ஒளி சுடர் தன் வெப்ப ஆற்றல்மூலம் தொடர்ந்து எரிய தேவையான வெப்பத்தை (Chain Reaction) சங்கிலி தொடர் வினை மூலம் இயங்குகிறது. இதனால் மெழுகு எரிந்து உருக உருக அதன் உயரம் குறைந்து கொண்டே போகும்.

தொழில் பாதிப்பு: உலகம் முழுவதும் பல இடங்களில் மெழுகுவர்த்தி தயாரித்தல் சுயதொழிலாக உருவாக்கப்பட்டது. நாளடைவில் மின்சார விளக்கு மற்றும் பேட்டரி விளக்கு, வீட்டில்மின்சாரம் அணைந்தால் உடனடியாக மாற்றி எரியும் இன்வர்டர்களால் மெழுகுவர்த்தி தொழில் பாதிப்படைந்துள்ளது.

கிறித்தவ சமய வழிபாட்டிலும், விழாக்கள் தொடங்கும் போது குத்து விளக்கு ஏற்றுவதற்கும், பிறந்தநாளுக்கு கேக்கில் வைத்து ஏற்றுவதற்கும், நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் மட்டுமே இன்று மெழுகுவர்த்தி பயன்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE