மாற்றம் கண்ட பள்ளி சீருடைகள்

By கே.சாந்தசீலா

முன்னொரு காலத்தில் பாவாடை, தாவணி அணிந்து வந்த உங்க வயது குழந்தைகள் பள்ளிகளில் படித்தார்கள் என்று இப்பொழுது பள்ளியில் பயிலும் வளரிளம் பெண் குழந்தைகளிடம் சொன்னால் நிச்சயம் அப்படியா என ஆச்சர்யமாகக் கேட்கலாம். சிலர் கேட்டு அறிந்தும் இருப்பார்கள். நம் பள்ளிகளில் வளரிளம் பெண்களின் உடைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் வந்துள்ளதைப் பற்றி இன்றைய தலைமுறையாகிய நாம் அறிந்து கொள்ளலாம்.

பெண்கள் கல்வி கற்க பல தடைகள் இருந்தது. அதிலும் பருவமெய்திய பெண்களின் கல்விநிலை இன்றைய நவீன காலத்திலும் பல தடைகளைச் சந்தித்தே வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை தொடக்கநிலையில் ஆண், பெண் குழந்தைகள் இருவருக்கும் மேலாடையாக சட்டையே சீருடையாகப் பள்ளிகளில் இருந்தது. இன்றைய காலத்தில் உயர்தொடக்க நிலையை அடைந்தவுடன் ஆண் குழந்தைகள் பேண்ட், சட்டையும் பெண்களுக்கு கோட்டுடன் கூடிய சுடிதாரும் அணிகின்றனர்.

முன்பெல்லாம் வளரிளம் பெண்கள் பருவமெய்திய உடனே அல்லது ஒன்பதாவதை எட்டும்போதோ பாவாடை, தாவணியைச் சீருடையாக அணிந்து வரவேண்டும். பாவாடை, தாவணி அணிந்த நம் முன்னாள் தலைமுறையைக் கேட்டால் அதன் சிரமத்தைச் சேர்த்தே சொல்வார்கள்.

அது நடக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தியது, கவனத்தைச் சிதறடித்தது, விளையாடும் போது சிரமம் என பல சொல்வார்கள். ஆங்கிலத்தில் ஹாப் சாரி ( Half Saree) என்று அதைச் சொல்வார்கள். தாவணியின் ஒரு நுனியைப் பாவாடையில் சொருகணும், சொருகிய தாவணியின் நுனி அவிழாமல் இருக்க பாவாடையை இறுக்கமாகக் கட்டியிருக்கணும். தாவணியை ஒரு சுற்று சுற்றி மடிப்பெடுத்து ரவிக்கையில் மடிப்பு கலையாமல் இருக்க பின்னிட வேண்டும்.

அத்தோடு முடியவில்லை பின்பு தாவணியின் மற்றொரு நுனியைக் முன்பக்கம் கொண்டு வந்து இடுப்பில் சொருகி பின்னிட வேண்டும். உடலை போர்த்தி அங்கங்கே பின்னிட்டிருக்க வேண்டும். இல்லையெனில் தாவணிநகர்ந்திடுமோ என்ற கவலை ஒரு பக்கம் மூளையில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். அதுவும் இருபாலரும் பயிலும் கல்வி நிறுவனமாக இருந்தால் மேலும் அதீத கவனத்தோடு இருக்க வேண்டி இருக்கும். இந்தத் தாவணி அணிந்தே அப்பொழுது உடற்கல்வி பாடவேளையில் விளையாடினர். அப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தொலைவில் இருந்து மிதிவண்டியில் வரவேண்டுமெனில் மிதிவண்டியில் பாவாடை, தாவணி மாட்டிக் கொள்ளாத வகையில் ஓட்டிக்கொண்டு பள்ளி செல்ல வேண்டும். இந்த உடைதான் எவ்வளவு இன்னல்களை ஏற் படுத்தியிருந்தது. கல்வியில் கவனம்செலுத்த வேண்டிய அத்தியாவசியத் தேவை எனினும் தன் கவனம் முழுக்க தன் உடையான தாவணியின் மீதே கவனம் முழுதும் வைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் அன்றைய வளரிளம் பெண்களுக்கு இருந்தது.

காலம் மாற, பல குரல்கள், ஆடை சமத்துவம் சார்ந்து எழுந்ததால், வசதியாக அணிவதற்கு எளிதான ஆடையான துப்பட்டாவுடன் கூடிய சுடிதாருக்கு மாற்றம் கண்டது பள்ளிகள். துப்பட்டா போடுவதிலும் சிக்கல் நீடிக்கவே அடுத்தகட்ட மாற்றமான கோட், சுடி என இன்றைய கால சீருடையாக மாறியது. எனினும் உடைகள் அணிவது பொதுவானதாக மாறும்போது, பாலின சமத்துவத்தைப் பேணுவதாக அமையும். கேரள பள்ளிகளில் பாலின பேதமற்ற உடைகள் பின்பற்றப்படுவது வரவேற்கத்தக்கது.

உடை பள்ளிக் குழந்தைகளுக்கு மாறியதை நாம் வரவேற்பது ஒருபக்கம். இருப்பினும் பெண் ஆசிரியருக்கான உடையிலும் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும். ஆங்காங்கே பெண் ஆசிரியர்கள் அதைமுன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதை அரசாங்கமே முன்னெடுத்தால் சமத்துவ பாதை ஆசிரியர்கள் வரையிலும் நீளும்.

- கட்டுரையாளர்: ஆசிரியர், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பூவலைஅகரம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்