ஆழ்துளை கிணறு என்றாலே சட்டென்று தூக்கிப் போடுகிறது. காரணம் என்ன தெரியுமா? அது ஏற்படுத்தும் விபத்துகள்தான்! அண்மையில் பீகாரில் 3 வயது குழந்தை ஆழ்துறை கிணற்றில் (போர்வெல்) விழுந்து மீட்கப்பட்ட செய்தியை அனைவரும் அறிந்திருப்போம். கைவிடப்பட்ட திறந்தவெளிக் கிணறுகள், பயனற்ற குவாரிக் குழிகள், ஆழ்துளைக் கிணறுகள் பல உயிரிழப்புகளுக்கு காரணமாகி இருக்கின்றன.
நம் நாட்டில் கோடிக்கணக்கில் கிணறுகள் உள்ளன. அப்படி இருக்கும்போது அதற்கான பாதுகாப்பான வழிகாட்டி நெறிமுறைகளை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். 2019-ல் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சுஜித்தை 83 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெறும் உடலாகத்தான் மீட்க முடிந்தது.
சமீப காலத்தில் இப்படியான விபத்துகளில் குழந்தைகள் இறப்பது வழக்கமாகி வருகிறது. தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்துவிட்டது. பேருந்திலிருந்து துளை வழியே விழுந்துவிட்டது. மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டது. சூடான பாலை அல்லது குழம்பை மேலே கொட்டிக் கொண்டது என பல செய்திகள் வரும் போதெல்லாம் மனம் பதறும். அதுவும் ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்துவிட்டது என்ற செய்தி வந்தால் இன்னமும் பதற்றம் அதிகமாகிவிடும். மீட்புப் பணியுடன் பிரார்த்தனைகளும் தொடரும்.
பல மணி நேரம் போராடி குழந்தையை மீட்டெடுத்துப் பலனில்லாமல் போகின்ற கொடுமையை என்ன சொல்வது? இந்த சோக நிகழ்வு நடந்த பிறகு அதைப்பற்றி இரண்டொரு நாள்கள் வருத்தமும் ஆதங்கமுமாய் பேசுவோம். பின்னர் அதுவும் கடந்து போகும்.
பெங்களூருவில் சுவிட்ச் ஆப் செய்யாத செல்போன் சார்ஜரை வாயில் வைத்து கடித்து குழந்தை மின்சாரம் பாய்ந்து இறந்த செய்தி அதிர்ச்சியளித்தது.
இதற்கெல்லாம் யார் பொறுப்பு? - செல்போன் சார்ஜரை சுவிட்ச் ஆப் கூடசெய்யாத பொறுப்பின்மை ஒரு குழந்தையை பலி கொண்டுவிட்டது. பொறுப்பற்று போனது யார்? தாயா அல்லது தந்தையா? பத்து மாதம் வயிற்றில் சுமந்தவர்கள் குழந்தை பிறந்த பிறகு அதன் வளர்ப்பில் அலட்சியம் காட்டலாமா? ஒரு குழந்தையை சமாளிக்கும் அளவிற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லாமல் போனதா என்ன? பத்திய உணவு சாப்பிட்டு பாலூட்டி சீராட்டி வளர்க்கின்ற குழந்தையை கவனத்துடன் பாதுகாப்பாக வளர்க்க வேண்டாமா?
கவனம், பொறுப்பு, நிதானம், சகிப்புத்தன்மை இன்றைய பெற்றோர்களிடம் குறைந்துவிட்டது. குழந்தையைப் பார்த்துக் கொள்ள அன்று வீடு நிறையஉறவினர்கள் இருந்தார்கள். அது கூட்டுக்குடும்பம் தந்த வரம். 9 குழந்தைகள் இருந்தபோது கூட இப்படி விபத்துகள் நடக்கவில்லை. அப்படியே நடந்திருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடந்திருக்கும்.
இப்போது வீ்ட்டுக்கு ஒரு குழந்தைதான். ஆனால் ஆபத்துகளோ அதிகம். ஏன் தெரியுமா? ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை பொறுப்புடன் கவனித்து பார்த்துக் கொண்டது. இன்றோ தாத்தா பாட்டிகூட இல்லாத வெறுமைதான்!
இந்தச் சூழலில் பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். வேலை முக்கியம்தான். ஆனால் அதைவிட நம்குழந்தை முக்கியமில்லையா! குழந்தை ஆழ்துளை கிணறு இருக்கும் பகுதிக்கு செல்லாமல் இருப்பது, சாலையில் விளையாடாமல் இருப்பது, மாடி கைப்பிடிச் சுவரைப் பிடித்து எம்பி பார்க்காமல் இருப்பது, தரையோடு இருக்கும் தண்ணீர்த் தொட்டியை மூடிவைப்பது போன்றவற்றை ஒரு தாயால் நிச்சயம் செய்ய முடியும்.
எதிர்காலத்தை உருவாக்குங்கள்: ஒவ்வொரு பெற்றோரும் கவனமும் பொறுப்புமாய் இருந்தால் பல்வேறுவிபத்துகளை தவிர்த்து குழந்தைகளை காப்பாற்றலாம். அதையும் மீறி இந்த விபத்து நடந்தால் அந்தக் குழந்தையை பாதுகாப்பாக மீட்பதற்கான அதிநவீன கருவியை கண்டுபிடிப்பதும் அவசர ்அவசியமான ஒன் றாகும்.
- கட்டுரையாளர்: பள்ளி முதல்வர், நவபாரத் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி, இ-வெள்ளனூர், திருச்சி மாவட்டம்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago