நாளைய தலைவர்கள்

By ச.முத்துக்குமாரி

எட்டாம் வகுப்பு குடிமையியலில் "மாநில அரசு எவ்வாறு செயல்படு கிறது" என்கிற பாடத்தை நடத்திக் கொண்டிருந்தேன். 'ஒரு சட்டம் எப்படி இயற்றப்படுகிறது?' என்பதை புரிய வைக்க ஒரு வகுப்பறை செயல்பாட்டை (Class room activity) யோசித்தேன். "நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புதிய சட்டம் போட்டால் என்ன?" என்று கேட்டேன். மாணவர்கள் உற்சாகமானார்கள்.

அடுத்த நாள். எவையெல்லாம் சட்டமாக கொண்டு வரலாம் என பட்டியல் போட்டார்கள். ஊழல் ஒழிப்பு, அரசு மருத்துவமனை பிரச்சினை, சாலை வசதி, குடிநீர் வசதி, சாதி சான்றிதழ் பெறுவதற்கு ஏற்படும் தாமதம், பேருந்து வசதி, லஞ்சம் தவிர்த்தல், டாஸ்மாக் மூடுதல் என பட்டியல் நீண்டது. பெரும்பாலானவை அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளாக இருந்தன.

'அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலையில் சத்துணவு தருவதற்கான சட்டம்' பற்றிய கஸ்மிதா என்கிற மாணவியின் யோசனைக்கு வகுப்பு சம்மதித்தது. மாநில சட்டமன்ற செயல்பாடுகள் குறித்தும், சட்டம் இயற்றும் நடைமுறைகள் பற்றியும் எளிதாக எடுத்துரைத்தேன்.

மாதிரி சட்டமன்றம்: மாணவர்கள் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என இரண்டு அணிகளாகப் பிரிந்து எதிரெதிராக அரை வட்டவடிவில் தரையில் உட்கார்ந்தனர். எனக்கு ஆளுநர் பணி. சபாநாயகர்- ராஜபிரியன், ஆளுங்கட்சித் தலைவர் - அனுஜா,எதிர்கட்சித் தலைவர்- சக்திகரன், எதிர்கட்சியைச் சேர்ந்த கஸ்மிதா மசோதாவை அறிமுகம் செய்தார். ஆளுங்கட்சியினர், காலை உணவுத்திட்டம் கொண்டு வருவதில் உள்ள பணச் சிக்கல்கள் பற்றி பேசினர்.

எதிர்கட்சியில் கஸ்தூரியும் கஸ்மிதாவும் ஆரம்பத்தில் இருந்தே வலுவான காரணங்களை அடுக்கினர். காலைஉணவால் குழந்தைகளின் ஆரோக்கியம், பேருந்து வசதி இல்லாததால் சாப்பிடாமல் வரும் மாணவர்களின் உடல்நிலை, இல்லாத வீட்டுப் பிள்ளைகளுக்கு உணவு தர வேண்டிய அவசியம் குறித்து அவர்கள் எடுத்து வைத்த வாதங்களில் அசந்து போனேன். அடுத்து ஓட்டெடுப்பு. பெரும்பான்மையுடன் மசோதா வெற்றி பெற்றது. ஆளுநராக என் ஒப்புதல் பெற்றதும் "அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம்" சட்டமாக மாறியது.

எதனால் பாதிப்பு? - சட்டமன்ற விவாதத்திற்குப் பின்,மறுநாள் "மாதிரி சட்டமன்ற" அனுபவங்கள் பற்றி கலந்துரையாடினோம். "ஏன் டீச்சர் விவாதம் நடக்கும் போது எனக்கென்னனு கேள்வியே கேட்காம உக்காந்திருந்தா எங்க பக்கம் பலவீனமாகுது. அப்ப நாம அனுப்புற உறுப்பினர்கள் கேள்வி கேட்காம, இல்ல லீவ் போட்டா அவ்வளவுதானா?" "காசுக்கு ஓட்டு வாங்கி தேர்தல்ல ஜெயிச்சா அவங்களால நமக்கு ரொம்ப பாதிப்புன்னு இப்போதான் புரியுது டீச்சர். "நாங்க தெளிவாக இல்லாட்டி சட்டமன்றத்துல தெளிவான ஆட்கள் இருக்க மாட்டாங்க. இல்லையா டீச்சர்?". இப்படி மிக நுணுக்கமாக உணர்ந்தவற்றை பகிர்ந்தார்கள்.

குறிப்பாக கஸ்மிதா வெளிப்பட்ட விதம் ஆச்சரியமாக இருந்தது. வீட்டில்குறிப்புகளைத் தயாரித்து வந்திருந்தார். உறுதியான குரலில் அவர் பேசியது விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.

இதுவரை கஸ்மிதா வகுப்பில் வெளிப்பட்டதில்லை. அவருக்குள் இருந்த சமூகம் சார்ந்த தெளிவு எனக்குள் ஆச்சரியத்தைத் தந்தது. ஆமாம் அவரை நான் கண்டுபிடித்த நாள் அது.

இந்தச் செயல்பாடு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்தது. சமீபத்தில் அரசின் காலை உணவுத் திட்டம் அறிவிப்பு வெளியானதும், அந்தமாணவர்கள் என்னிடம் சந்தோசமாகப் பகிர்ந்து கொண்டனர். ஒரு செயல்பாட்டைத் தொடர்ந்து மாணவர்கள் அரசின் சட்டங்களைக் கவனிப்பதை விட என்ன மாற்றம் வேண்டும்?

‘‘கல்வி உலகை மாற்றாது. கல்வி மக்களை மாற்றும். மக்கள் உலகை மாற்றுவார்கள்’’ எனும் பாவ்லோ பிரேய்ரேவின் கருத்தை உணர வைத்த வகுப்பறை அனுபவமாக இது எனக்கு மாறியது.

- கட்டுரையாளர் ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி விடத்தாகுளம் விருதுநகர் மாவட்டம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

மேலும்