நமது உடலும் இந்த பிரபஞ்சமும் பஞ்சபூதங்களால் ஆனது. நிலம், நீர், காற்று நெருப்பு, ஆகாயம் (வெற்றிடம்) ஆகியவை வாழ்வின் அடிப்படை. உயிரைக் காக்க உணவும், நோயின்மையும் அவசியம். நோயற்ற வாழ்க்கை வாழ வேண்டுமானால் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அதில் பிரபஞ்ச ஆற்றலும், பிராண சக்தியும் இணைந்து கிடைக்கும்.
"வேதி உரத்தால் கெட்டது பயிறு;
குப்பை உணவால் கெட்டது வயிறு"
என்பதை முற்றிலும் இப்போது உணர்ந்திருக்கிறோம்.
» ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஏபிஜே அகாடமி உடன் இணைந்து நடத்தும் ‘வேதிக் கணிதம்’ ஆன்லைன் நிகழ்ச்சி
இவற்றின் அதிகப்படியான பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம். வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்து குறைந்தபட்சம் நமது அன்றாட தேவைகளுக்கான காய்கறிகளை உற்பத்தி செய்ய முன் வந்திருக்கிறோம். உணவுப் பொருட்களை விளைவிப்பது மட்டுமல்லாமல் மண்ணோடு உறவாடும் மகத்தானஉணர்வையும் தரும். அந்த உன்னதமான ஈடுபாட்டை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தருவது பெரியவர்களின் முக்கிய கடமை.
மண்ணை தயார்படுத்துவது தான் முதல் பணி. இயற்கையான உயிரி உரங்கள் மண்ணில் ஏற்கனவே இந்த பிரபஞ்சத்தால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அவை மண்ணில் வாழும் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் நீல பசும் பாசிகள். மண்ணுக்கு தேவையான காற்றோட்டத்தையும், ஈரப்பதத்தையும் கொடுக்கும் போது அவை தானே உயிர் பெற்று மண்ணை வளமாக்கிவிடும்.
மேலும் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களின் பெருக்கத்தை அதிகப்படுத்த நினைத்தால் உயிரி உரங்களையும் வாங்கி மண்ணில் இடலாம். ஆற்றல்மிக்க உயிரணுக்களை கொண்ட தயாரிப்புகளே உயிரி உரங்கள். இயற்கையில் நுண்ணுயிரிகள் ஆற்றல் மிக்கதாக இல்லாத நிலையில் செயற்கையாக இவ்வுயிர் உரங்களை பெருக்கி மண்ணில் இட்டு ஆற்றலை அதிகரிக்கலாம்.
பொதுவாக மண்ணில் ஈரத்தன்மையை தக்க வைக்க செம்மண்ணும், அதிகமான நீர் தேங்காமல் வடிகட்டுவதற்கு மணலும் கலந்த மண் சிறந்ததாக இருக்கும். அல்லது வண்டல் மண்ணாக இருந்தால் சிறப்பாக இருக்கும். ஆறு மற்றும் கடல் நீரால் அடித்து வரப்படும் மணல், களிமண் மற்றும் கரிம சத்துக்கள் சேர்ந்ததே வண்டல் மண்.
மண்ணை தயார்படுத்த துவக்க நிலை இடுபொருட்களாக நாம் சிலஇயற்கை கரிம உரங்களை பயன்படுத்தலாம். தொழு உரம் (கம்போஸ்ட்), மண்புழு ( வெர்மி கம்போஸ்ட்) உரம் மற்றும் பசுந்தாள் உரங்களை இட்டு மண்ணை தயார் படுத்தலாம்.
பயிர்க் கழிவுகள், கால்நடைக் கழிவுகள், பண்ணைக் கழிவுகள், அறுவடைக்குப் பின் கிடைக்கும் கழிவுகள் போன்றவற்றை ஓரிடத்தில் கொட்டி வைத்து அவை மக்கிய பிறகு கிடைக்கக்கூடிய கருமை நிற உரமே தொழு உரம்.
இதில் கரிச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் தழைச்சத்துக்கள் நிறைந்து இருக்கும். 60 சதவிகிதம் மக்கிய குப்பையை மண்புழு தனது உணவாக உட்கொண்ட பின் வெளிவிடும் கழிவுகளே மண்புழு உரம். உழவனின் நண்பனான மண்புழு தரும் இவ்வுரம் தரமான இயற்கை உரம்.
பசுமையான தாவரப் பகுதிகளை உரமாக பயன்படுத்தலாம். பசுந்தாள் உரங்களும், பசுந்தழை உரங்களும் மண் அரிப்பை குறைக்கும். நீர் பிடிப்புக் கொள்ளளவை அதிகப்படுத்தும். வேர் புழுக்கள் தாக்காமல் தடுக்கும். இதற்கு மேலும் நாம் வளர்க்கும் செடி கொடிகள் ஆரோக்கியமாக வளர அவற்றிற்கு ஊட்டச்சத்து தரும் வகையிலும், பூச்சிகளை விரட்டிடவும் வீட்டிலேயே தயாரிக்கும் சிறப்பு அங்கக இடுபொருட்களை பயன்படுத்தலாம்.
இப்படி மண்ணை பக்குவமாக தயார்படுத்திய பின் நமக்கு தேவையான நாட்டு ரக காய்கறிகளையும், பூச்செடிகளையும் நம் வீட்டுத் தோட்டத்தில் நட்டு அன்றாடம் பராமரித்து உணவையும், உடலையும், மனதையும் ஒன்றிணைப்போம்.
- கட்டுரையாளர் முதுகலை ஆசிரியர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
29 days ago