மதுரை: மதுரையில் உலகத் தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கிறார்.
தமிழகத்தில் இதுவரை சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மட்டுமே ஆசியாவிலே பிரம்மாண்ட நூலகமாக கருதப்பட்டது. தற்போது அதைக் காட்டிலும் பிரம்மாண்டமாக மதுரை புது நத்தம் சாலையில் சர்வதேச தரத்துடன் ரூ.114 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதில் ரூ.99 கோடி நூலக கட்டிடத்திற்கும், ரூ.10 கோடி புத்தகங்கள் வாங்குவதற்கும், ரூ.5 கோடி தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கவும் செலவிடப்பட்டுள்ளது.
இந்த நூலகம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடியில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. 1 ஆண்டு 4 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 70 ஆயிரம் தமிழ் புத்தகங்கள், 2 லட்சத்து 75 ஆயிரம் ஆங்கிலப் புத்தகங்கள், 6 ஆயிரம் இ-புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.
மேலும், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டுநினைவு நூலகத்தில் பழங்காலஓலைச்சுவடிகள் காட்சிப்படுத்தியிருப்பதைப் போல, இந்த நூலகத்திலும் பழங்கால ஓலைச்சுவடிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. பணிகள் முடிவுற்ற நிலையில், இரண்டரை லட்சம் புத்தகங்களுடன் மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த நூலகத்தை வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
இதனிடையே, அமெரிக்கா சென்றுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், “அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பொதுநூலகத்தை பார்வையிட வாய்ப்பு கிடைத்தது, 140 ஆண்களுக்கு மேலாக செயல்படும் இந்நூலகத்தைவிடவும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப்பெரிய பரப்பளவில் பிரம்மாண்டமாக மிகச்சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன்அமைக்கப்பட்டுள்ளது என்பதைஎண்ணி தமிழனாக பெருமையடைந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் நூலக கட்டிடத்தின் அடித்தளத்தில் 1,795 சதுரமீட்டரில் பார்க்கிங் வசதியும், நாளிதழ் சேமிப்பு அறை, நூல் கட்டும் பிரிவுசெயல்பட உள்ளது. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக்கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-1, பல்வகைப் பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, மின் கட்டுப்பாட்டு அறை, தபால் பிரிவு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
6 தளங்களுடன்: முதல் தளத்தில் கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகப்பிரிவு, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-2, அறிவியல் உபகரணங்கள் பிரிவு செயல்பட உள்ளது.
இரண்டாம் தளம் முழுவதும் தமிழ் நூல்கள் பிரிவு, மூன்றாம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு போன்றவை வர உள்ளது. நான்காம் தளத்தில் போட்டித்தேர்வுக்கான நூல்கள் பிரிவு, ஐந்தாம் தளத்தில் ஐம்பெரும் காப்பியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு போன்ற நூல்கள் படிக்கும் வசதி, அரிய நூல்கள் பிரிவு, மின் நூலகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
ஆறாம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு (நூல் இரவல் பிரிவு), நூல் பகுப்பாய்வு நூற்பட்டி தயாரித்தல் பிரிவு, நூலக நிர்வாகப்பிரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு, பணியாளர்கள் உணவருந்தும் அறை போன்றவை உள்ளன. இந்நூலகம் மதுரையின் மற்றொரு முக்கியமான அடையாளமாக அமைந்திருப்பது மாநகருக்கு கிடைத்த பெருமையாகும்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago