டிங்குவிடம் கேளுங்கள் - 26: மின்னணுக் கழிவுனா என்ன?

By செய்திப்பிரிவு

சில பாத்திரங்களின் அடிப்பாகம் ஏன் தாமிரத்தால் செய்யப்படுகிறது டிங்கு?

ஆர். ராகினி, 9-ம் வகுப்பு, விக்னேஷ் வித்யாலயா, கூத்தூர், திருச்சி.

இரும்பு, அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது, உலோகம் செறிவாக இருக்கும் இடத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். மற்ற இடங்களில் வெப்பம் குறைவாக இருக்கும். அதனால்தான் நாம் சமைக் கும்போது, அடியில் பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது.

கொஞ்சம் கவனிக்காமல் விட்டால், தீய்ந்து பொருள் வீணாகிவிடுகிறது. தாமிரம் நன்றாக வெப்பத்தைக் கடத்தக் கூடியது. வெப்பமும் ஒரே மாதிரி எல்லா இடங்களுக்கும் பரவுகிறது. அதனால் சமைக்கும் பொருள் எளிதில் தீய்ந்து போவதில்லை. எனவேதான் சில பாத்திரங்களின் அடிப்பாகம் தாமிரத் தால் செய்யப்படுகிறது, ராகினி.

மின்னணுக் கழிவு (E- waste) என்பது என்ன?

- வி. செளமியா, 12-ம் வகுப்பு, விக்னேஷ் வித்யாலயா பள்ளி, திருச்சி.

நாம் பயன்படுத்தும் கணினி பாகஙகள், கைபேசி, சார்ஜர், சிடி, ஹெட்போன், டிவி, ஏசி போன்றவை எல்லாம் மின்னணு சாதனங்கள். இவை செயல் இழக்கும்போது மின்னணுக் கழிவுகளாக மாறிவிடுகின்றன. இந்தியாவில் பெரும்பான்மையான மின்னணுக் கழிவுகள் எரிக்கப்படுகின்றன.

அந்தப் பொருள்களில் இருக்கும் சிலிகான், காட்மியம், பாதரசம் போன்ற வேதிப்பொருள்கள், நிலத்தடி நீரில் கலந்து மாசுபடுத்து கின்றன. மின்னணுக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். தேவை இல்லாமல் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது. கழிவுகளை மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால், மின்னணுக் கழிவுகளைக் குறைக்கலாம், செளமியா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE