நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 18: குறுகிய கால சேமிப்புக்கு அதிக பலன் தரும் ஆர்.டி.

By இரா.வினோத்

கடந்த இரண்டு அத்தியாயங்களில் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து பார்த்தோம். சேமிப்பு கணக்கு மூலம் சேமிக்கும் பணத்துக்கு குறைந்த அளவிலான வட்டியே கிடைப்பதால் அதனை லாபகரமான முதலீடாக‌ கருத முடியாது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பண வீக்கத்தை (பணவீக்கம் என்பது பொருட்களின் விலை உயர்வால், பணத்தின் மதிப்பு குறைவது ஆகும்) சேமிப்பு கணக்கு மூலம் கிடைக்கும் குறைந்த அளவிலான வட்டியைக் கொண்டு சமன் செய்யவும் முடியாது. எனவே பணவீக்கத்தை சமாளிக்கும் வழிமுறைகளில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம்.

அஞ்சலகம், வங்கி ஆகியவற்றில் உள்ள‌ தொடர் வைப்பு நிதி (Recurring Deposit), நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit) திட்டங்கள் நம்முடைய குறுகிய கால சேமிப்புக்கு மிக சிறந்த திட்டங்கள் ஆகும். இதில் சேமிக்கும் பணத்துக்கு சற்று அதிகமான வட்டியுடன் முதிர்வு தொகை கிடைப்பதால் நம்முடைய பெரிய தேவைகளையும் எளிதாக‌ பூர்த்தி செய்து கொள்ள‌ முடியும். இந்த திட்டங்களை சரியாக பயன்படுத்தி சேமித்தால் பள்ளி / கல்லூரி கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நேரத்தில் வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்க்க முடியும். முறையாக சேமித்தால் கல்விக் கட்டணம், மடிக்கணினி, இரு சக்கர வாகனம், நகைகள், உடைகள் என தேவையான பொருட்களையும் நாமே வாங்கிக் கொள்ளலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE