ஆயிரம் ஜன்னல் வகுப்பறை 10: மாணவர்களின் கவனிக்கும் திறனை வளர்க்க என்ன செய்யலாம்?

By ரெ.சிவா

வகுப்பறையின் ஆரவாரம் ஓய சற்றே நேரமானது. அழித்த வார்த்தையை எழுதிய நெறியாளரின் முகத்தில் மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த சிரிப்பு. வகுப்பறையை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த வார்த்தை, Girl. ‘பள்ளியில் girl வேண்டும்' என்பதே முழு வாக்கியம். அதை எழுதச் சொன்ன மாணவன் இந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் எங்கள் பள்ளியில் சேர்ந்தவன்.

ஆரவாரம் ஓய்ந்ததும் ஒரு குரல் எழுந்தது. என்னங்க சார், இப்படி எல்லாம் சொல்றான் என்று அந்த வாக்கியத்தைச் சொல்லி எழுந்த அந்தக் குரலைப் பின்பற்றின, மேலும் சில மகிழ்ச்சிக் குரல்கள்."எட்டாம் வகுப்பு வரை பெண் குழந்தைகளோடு படித்தவர்கள் இங்கு பலரும் இருக்கீங்க தானே" என்று கேட்டேன். ஆமா சார் என்று ஏராளமான குரல்கள் எழுந்தன. "இப்போ பசங்களுக்கு என்று தனிப்பள்ளிக்கு வந்தாச்சு. இது பெரிய மாறுபாடு தான். அதனால் தான் அவனுக்கு பெண் பிள்ளைகள் இல்லாதது கேள்வியா எழுந்திருக்கு" என்றேன். வகுப்பறை நேரம் முடிவடைந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE