டிங்குவிடம் கேளுங்கள்-12 : கொட்டாவி ஏன் மற்றவர்களை தொற்றிக்கொள்கிறது?

By செய்திப்பிரிவு

பெர்முடா முக்கோணம் ஏன் மர்மங் கள் நிறைந்ததாக இருக்கிறது, டிங்கு?

- சு. ரஞ்சனி, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை.

பஹாமஸ் நாட்டுக்கு அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் பெர்முடா முக்கோணம் இருக்கிறது. இப்பகுதிக்கு மேலே செல்லும் விமானங்கள், கடந்து செல்லும் கப்பல்கள் மாயமாகிவிட்டதாகச் சொல்லப்படுவதால், இதைச் ‘சைத்தானின்முக்கோணம்’ என்றும் அழைக்கிறார்கள். இப்பகுதியில் நடைபெற்ற சில விபத்துகள் மனிதர்களின் தவறுகளால் நடந்திருக்கின்றன. கடற்கொள்ளையர்களாலும் காணாமல் போயிருக்கின்றன. உலகப் போர்களின்போது கப்பல்களையும் ஆயுதங்களையும் இங்கே போட்டிருக்கிறார் கள். ஒரு சில விபத்துகள் சூறாவளி, பேரலை போன்ற இயற்கைப் பேரிடர்களால் நிகழ்ந்திருக்கின்றன. பெர்முடா முக்கோணம் குறித்து வெளிவந்திருக்கும் ஏராளமான செய்திகளுக்கு ஆதாரம் இல்லை, ரஞ்சனி.

ஒருவருக்குக் கொட்டாவி வரும் போது அது மற்றவர்களையும் தொற்றிக்கொள்கிறதே ஏன், டிங்கு?

- வி. சந்தான லட்சுமி, 10-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி,சமயபுரம்.

கூடுதல் வேலையின் போது மூளை வெப்பமடையும். அதனைக் குளிர்விக்கத்தான் கொட்டாவி வருகிறது. வாயை அகலமாகத் திறந்து காற்றை உள்ளே இழுக்கும்போது, குளிர்ந்த ரத்த ஓட்டம் மூளைக்குப் பாயும் என்று உடலியல் ஆய்வாளர்கள் சொன்ன கருத்தை, 2016-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வு ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஒருவர் கொட்டாவி விட்டவுடன் தொடர்ச்சியாக அருகில் இருப்பவர் களும் கொட்டாவி விடுவது ஏன் என்பதற்கும் பல்வேறு காரணங் களைச் சொல்கிறார்கள். இதுதான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒருவர் கொட்டாவியை நினைத்தால்கூடக் கொட்டாவி வந்துவிடும் சந்தான லட்சுமி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE