கையருகே கிரீடம் - 11: பல துறைகளில் வடிவமைப்பாளர் ஆகலாம்

By செய்திப்பிரிவு

அலைபேசி முதல் ஆளில்லா விமானம் வரை புதுமையான வடிவமைப்புகள் நம்மை கவர்ந்திழுக்கின்றன. பொறியியல் படிப்புகளைத் தாண்டி ‘வடிவமைப்பு’ (Design) தனித் துறையாக உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. புதுமையாக சிந்திப்பதும் ஒவியம் வரைவதும் உங்களுக்கு கைவந்த கலையாக இருந்தால் நீங்கள் வடிவமைப்பாளர் ஆகலாம் (Designer). இந்தியாவில் எந்தெந்தத் துறைகளில் வடிவமைப்பாளர் ஆகலாம், இதற்கான வாய்ப்புகள் என்னென்ன, எந்த பாடப்பிரிவை படிக்க வேண்டும் என்பதை எல்லாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பெரும்பாலான மாணவர்களுக்கு விஞ்ஞானி, வடிவமைப்பாளர், பொறியாளர் இந்த மூன்று பேருக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்பதில் குழப்பம் இருக்கும். இதை விளக்க ஒரு உதாரணம். ஒரு புதிய கார் உருவாக்கப்பட வேண்டுமெனில், பயணிகளை சுமக்க ஏதுவான காரின் கட்டமைப்பு, அதற்கு தோதான எஞ்சின், மின்சார-மின்னணு பாகங்கள் ஆகியவற்றை உருவாக்குபவர்கள் விஞ்ஞானிகள். காரின் வெளிப்புற வடிவமைப்பு, வண்ணம், பயணிகளின் வசதிக்கேற்ப இருக்கைகள், கைப்பிடி என உருவாக்குபவர்கள் வடிவமைப்பாளர்கள். விஞ்ஞானிகளும் வடிவமைப்பாளர்களும் உருவாக்கியவற்றை உற்பத்தி செய்பவர்கள் பொறியாளர்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE