கதை கேளு கதை கேளு - 11: தூய்மைப் பணியாளர்களின் மகத்துவம்

By செய்திப்பிரிவு

காலை ஆறு மணிக்கு வாக்கிங் செல்லும் வழக்கமிருந்தால், அனைவரும் காணும் காட்சி ஒன்று இருக்கும். முந்தைய நாள் முழுவதும் மனிதர்களால் அசுத்தமான சாலையை, முதுகுத்தண்டு வலிக்க வலிக்கப் பெருக்கித் தூய்மை செய்து கொண்டிருப்பார்கள் சிலர். நிரம்பிக் கிடக்கும் குப்பைத் தொட்டியில், மேலும் மேலும் தாராளமாய் கொட்டிச் செல்பவர் களை எட்டிப் பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் குப்பைகளை, அள்ளியெடுத்து வண்டியில் திணித்துக் கொண்டிருக்கும் சிலரையும் பார்ப்போம். இவர்கள் இவ்வாறு தெருவை, சாலையை, குப்பைத் தொட்டிகளை சுத்தப் படுத்தாமல் இருந்தால்?

மனவேதனையும் சகிப்புத்தன்மையும் கொ.மா.கோ.இளங்கோவின் சஞ்சீவி மாமா புத்தகம், தூய்மைப்பணியாளர்களின் வாழ்க்கை நிலையை, அவர்கள் சமு தாயத்தால் அடையும் மனவேதனையை, தூய்மைப் பணியாளர்களின் சகிப்புத்தன்மையும், உழைப்பும், இவர்களின் சேவையால்,மனிதர்களின் வாழ்வை மலரச் செய்யும் விதத்தை பற்றி பேசுகிறது. பேச்சிராசு என்ற 10 வயது மாணவன் தொடக்கப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஆறாம் வகுப்பு பயிலச் செல்கிறான். புதிதாக உருவாகிவரும் குடியிருப்புப் பகுதியில் பேச்சிராசு அவன் அக்காள் வேணி, அப்பா அம்மாவுடன் வசித்து வருகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE