டிங்குவிடம் கேளுங்கள்-10: நம்மைப் போல தாவரங்களுக்கு வலிக்குமா?

By செய்திப்பிரிவு

நமக்கு வலிப்பது போல தாவரங் களுக்கு வலிக்குமா, டிங்கு?

- பா. கீர்த்தி வாசன், 6-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சற்குணேஸ்வரபுரம்.

குளிர், வெப்பம், ஒலி, ஒளி போன்ற புறக்காரணிகளுக்குச் செயலாற்றுவது உயிருள்ளவற்றின் பண்பு. மனிதன், விலங்கு, பூச்சி, பறவை போன்றே தாவரங்களும் செயலாற்றுகின்றன.

இலைகளைக் கிள்ளும்போதும் மரக் கிளைகளை வெட்டும்போதும் காயம்பட்ட இடத்தைக் குணப்படுத்தும் பணி களைச் செய்கின்றன. உடைந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் செடி துளிர்விடும்.

நம்மைப் போல தாவரங்கள் வலியை உணரும் என்று சொல்ல முடியாது. ஆனால், காயத்தைக் குணப்படுத்தவும் தம் உயிரைக் காப்பாற்றவும் முயற்சி எடுக்கும், கீர்த்தி வாசன்.

காற்றில் ஆக்சிஜன், நைட்ரஜன் உள்பட பல வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்சிஜனை மட்டும் நாம் எப்படி சுவாசிக்கிறோம், டிங்கு?

- டி. டெய்சி ராணி, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்.

காற்றில் ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற பல வாயுக்கள் கலந்துதான் இருக்கின்றன. நுரையீரல் எல்லா வாயுக்களையும் எடுத்துக் கொள்வதில்லை. நம் ரத்தச் சிவப்பு அணுக்கள் காற்றிலுள்ள ஆக்சிஜனை மட்டும் எடுத்துக் கொள்ளும்.

உள்ளே செல்லும் ஆக்சிஜன், அசுத்தமாகி, கார்பன் டை ஆக்சைடாக வெளியேறுகிறது. வெளியில் இருக்கும் கார்பன்டை ஆக்சைடைவிட உள்ளிருக்கும் கார்பன்டை ஆக்சைடின் அழுத்தம் அதிகம். அதனால் அழுத்தம்குறைந்த இடத்தை நோக்கி, கார்பன்டை ஆக்சைடு வெளியேறி விடுகிறது, டெய்சி ராணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE