கவிதா நல்லதம்பி
மதியும் மலரும் பூங்காவில் அமர்ந்திருந்தார்கள். 'பந்தப் பார்த்தீங்களா'ன்னு கேட்ட சிறுவர்களிடம் 'அந்த ஊஞ்சலுக்குக் கிழக்க கிடக்குது பாரு'ன்னு பாட்டி சொல்ல, சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பொருளோடு பார்த்துக் கொண்டார்கள்.
மதி: எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே..
மலர்: என்னக்கா, உன் இலக்கண வகுப்ப இங்கயே தொடங்கிட்டயா?
மதி: இல்ல மலர். நாம பேசுகிற சொற்கள், அந்தச் சொற்களைத் தொடராக்குற விதம்னு எல்லாமே ஒரு பொருளோடதான் இருக்கு.. நான் அதத்தான் தொல்காப்பியரோட மொழியில சொன்னேன்.
மலர்: அக்கா, இப்ப பாட்டி சொன்னவார்த்தைகள்ல இருந்துதான சொல்ற.
மதி: ஆமாம். நாம பேசும்போது, நம்மைஅறியாமலேயே இலக்கணத்தைப் பயன்படுத்திக்கிட்டேதான இருக்கோம். அதை நினைச்சேன்.
மலர்: இப்ப பாட்டி சொன்னதுல இருந்து என்ன இலக்கணத்தைக் கண்டுபிடிச்சன்னு சொல்லட்டுமா, நான்காம் வேற்றுமை உருபுதான?
மதி: சரியாச் சொல்ற மலர். நேத்து நாம பேசிக்கிட்டிருந்தோமே எல்லைப் பொருள்னு. அதைத்தான் நினைச்சிட்ருந்தேன்.
மலர்: ஆமாக்கா. நீ சொல்ற மாதிரி, எல்லாத்தையும் இலக்கணத்தோடதான் பேசுறோம். ஆமாஎல்லைப் பொருளுக்கு வேற எடுத்துக்காட்டுசொல்லேன். பாட்டி ஊஞ்சலுக்குக் கிழக்கே பந்து கிடக்குதுன்னு சொன்னாங்க.
மதி: இந்தியாவிற்குத் தெற்கே இலங்கை அமைந்துள்ளது. தோட்டத்திற்கு அப்பால் கிணறு உள்ளது. இந்தத் தொடர்கள்ல இடம்பெறும் 'கு' எல்லைப் பொருளைச் சொல்ல உதவுது.
மலர்: இதையெல்லாம் தவிர்த்து வேறு பொருளைத் தர 'கு' என்கிற உருபு பயன்படுதா?
மதி: ஆமா மலர். தகுதிப் பொருள்னு சொல்றோம். வீதம், காலவரையறை போன்ற பொருள்கள்லயும் வரும். எடுத்துக்காட்டு, கற்றோர்க்கு அழகு பண்புடன் இருத்தல், மன்னருக்கு அழகு மக்களைப் பேணுதல் இந்த இரண்டுலயும் என்ன பொருளைத் தர 'கு' வந்திருக்கு?
மலர்: தகுதிப் பொருள்தானே கற்றோருக்கும், மன்னனுக்குமான தகுதியைச் சொல்லப் பயன்பட்டிருக்கு.
மதி: சரியாச் சொல்ற. நூற்றுக்குப் பத்துப் பேர்தான் வந்தனர், இந்தத் தொடர்ல வீதம்னா புரியுதா?
மலர்: நூற்றுக்குப் பத்து பேர். இங்க நூறுலஎவ்வளவுன்னு சொல்றது தான வீதம். இப்பசகவீதம்னு சொல்றோம்ல. நாலுக்கு மூணு. இப்படியும் சொல்லலாம்ல. கால வரையறைக்கு நானே சொல்லட்டுமா? மாலை ஐந்து மணிக்கு வகுப்பு முடியும்.
மதி: மலர், ‘கு’வுக்குப் பதிலாக, ‘பொருட்டு’, ‘நிமித்தம்’ போன்ற உருபுகள்கூட வரும். இதைச் சொல்லுருபுகள்னு சொல்வாங்க.
மலர்: நான் இந்த இரண்டுக்கும் எடுத்துக்காட்டுத் தொடர்களைச் சொல்றேன். கல்வியின்பொருட்டு பயணம் மேற்கொண்டான், தேர்வின் நிமித்தம் கண் விழித்துப் படித்தான்.
மதி: சில இடங்களில், ‘கு’ உடன் ‘ஆக’ என்பதும் சேர்ந்து வரும். வெற்றிக்காக விடாது உழைத்தான். இந்தத் தொடரைப் பார்த்தா உனக்கே புரியும்.
மலர்: ஆமாக்கா. நாம நான்காம் வேற்றுமை உருபைப் பற்றியே நிறையப் பேசிக்கிட்டிருக்கோம். ஐந்தாம் வேற்றுமை உருபைப் பற்றிச் சொல்லேன். இன் தானே. இல் கூட உண்டே.
மதி: ஆமாம். அதை நீங்கல் வேற்றுமைன்னுகூடச் சொல்வாங்க. இல் கூட.. இந்த உருபு எந்தப் பெயரோட சேருதோ அந்தப் பெயரை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுங்கிற பொருள்களாக வேறுபடுத்தும்.
மலர்: சரிக்கா, நேரமாகுது. அம்மா காத்திருப்பாங்க. தொடர்ந்து இன்னொரு நாள் பேசுவோம்.
கட்டுரையாளர்: தமிழ்த்துறை பேராசிரியை.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago