சுலபத்தவணையில் சிங்காசனம்-12: வடிவமைப்பாளர் ஆகலாம் வாங்க!

By செய்திப்பிரிவு

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

கைபேசி முதல் ஆளில்லா விமானம் வரை புதுமையான வடிவமைப்புகள் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. பொறியியல் படிப்புகளைத் தாண்டி ‘வடிவமைப்பு’ (Design) தனித்துறையாக உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுவருகிறது.

புதுமையாக சிந்திப்பதும் ஓவியம் வரைவதும்உங்களுக்குக் கைவந்த கலையாக இருந்தால்நீங்கள் வடிவமைப்பாளர் ஆகலாம் (Designer).இந்தியாவில் எந்தெந்தத் துறைகளில் வடிவமைப்பார் ஆகலாம், இதற்கான வாய்ப்புகள் என்னென்ன, எந்த பாடப்பிரிவைப் படிக்க வேண்டும் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள ஆவலா!

விஞ்ஞானி-வடிவமைப்பாளர்

பெரும்பாலான மாணவர்களுக்கு விஞ்ஞானி-வடிவமைப்பாளர்-பொறியாளர், இந்த மூன்று பேருக்கும் என்ன வித்தியாசம் என்பதில் குழப்பம் இருக்கும். இதை விளக்க ஒரு உதாரணம். ஒரு புதிய கார் உருவாக்கப்பட வேண்டுமெனில், பயணிகளை சுமக்க ஏதுவான காரின் கட்டமைப்பு, அதற்கு தோதான எஞ்சின், மின்சார-மின்னணு பாகங்கள் ஆகியவற்றை உருவாக்குபவர்கள் விஞ்ஞானிகள்.

காரின் வெளிப்புற வடிவமைப்பு, வண்ணம், பயணிகளின் வசதிக்கேற்ப இருக்கைகள், கைப்பிடி என உருவாக்குபவர்கள் வடிவமைப்பாளர்கள். விஞ்ஞானிகளும் வடிவமைப்பாளர்களும் உருவாக்கியவற்றை உற்பத்தி செய்பவர்கள் பொறியாளர்கள்.

எந்தெந்த துறைகள்?

பீங்கான்-கண்ணாடி வடிவமைப்பு, உயிரூட்டப்பட்ட (அனிமேஷன்) காணொளி வடிவமைப்பு, கண்காட்சி வடிவமைப்பு, திரைப்படம்-காணொளி தொடர்பு, மரச்சாமான்-கட்டிட உள் வடிவமைப்பு, பொருள் வடிவமைப்பு, ஆடை(ஃபேஷன்) வடிவமைப்பு, வரைபட (கிராபிக்ஸ்) வடிவமைப்பு, தொழிலக வடிவமைப்பு, வாகன வடிவமைப்பு ஆகிய துறைகளில் படிப்புகள் உண்டு.

படிப்புகள், கல்லூரிகள்?

இளநிலை வடிவமைப்பு படிப்பான பி.டெஸ் (Bachelor of Design-B.Des), பி.எஃப்.டெக் (Bachelor of Fashion Technology-B.FTech), ஜி.டி.பி.டி (Graduate Diploma Program in Design) போன்ற படிப்புகள் உண்டு. முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகளும் உண்டு. வடிவமைப்பு துறையில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.

தேசிய வடிவமைப்பு நிறுவனம் (National Institute of Design-NID) அகமதாபாத், பெங்களூரு,விஜயவாடா, ஜோர்ஹாட், குருஷேத்ரா, போபால் ஆகிய இடங்களில் உள்ளன. மும்பை,ஹைதராபாத், குவாஹாட்டி ஆகிய இடங்களில்உள்ள ஐ.ஐ.டி. நிறுவனங்களிலும் வழங்கப்படும் பி.டெஸ்., படிப்புகளில் சேரலாம்.

பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்.டெஸ். படிப்புகள் வழங்கப்படுகின்றன. தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Fashion Technology-NIFT) சென்னை உள்பட நாட்டின்பிற நகரங்களில் அமைந்துள்ளது. பி.டெஸ்., படிப்போடு பி.எஃப்.டெக் படிப்பும் இங்கு உண்டு.

நுழைவுத்தேர்வுகள்

ஐ.ஐ.டி. நிறுவனங்களில் சேர யுசீட் (Undergraduate Common Entrance Examfor Design-UCEED) என்ற நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். தேசிய வடிவமைப்பு நிறுவனங்களில் சேர டி.ஏ.டி. (Design Aptitude Test) என்ற தேர்வை எழுத வேண்டும். என்.ஐ.எஃப்.டி. நிறுவனம் தனியாக நுழைவுத்தேர்வை நடத்துகிறது.

பிளஸ் 2-வில் அறிவியல், வணிகவியல், கலை மற்றும் மானுடவியல் உள்ளிட்ட பிரிவுகளைப் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த நுழைவுத்தேர்வுகளை எழுதலாம். பி.எஃப்டெக்., படிப்பில் சேர இயற்பியல், வேதியியல், கணிதம் அவசியம்.

வேலைவாய்ப்பு

பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களிலும், நுகர்வு பொருட்கள்-வாகன வடிவமைப்பு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உண்டு. தனியாக வடிவமைப்பு கூடம் (Studio) அமைத்து பணி செய்பவர்களும் உண்டு. ஸ்கார்பியோ கார், வாக்கு இயந்திரம் என இந்திய வடிவமைப்பாளர்களின் பங்கு அதிகம். ரூபாய் குறியீட்டை உருவாக்கிய தமிழர் உதயகுமாரும் வடிவமைப்பாளர்தான்.

(தொடரும்)
கட்டுரையாளர், இயக்குனர்-தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்