எஸ்.எஸ்.லெனின்
நோய் தீர்க்கவும், வலி போக்கவும் உதவுவதுடன், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காகவும் உதவும் மருத்துவப் பிரிவே இயன்முறை மருத்துவம் (ஃபிசியோதெரபி).
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஃபிசியோதெரபிஸ்டாக பணிபுரிவதில் தொடங்கி, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறைகளில் ஆலோசகராவது வரை ஏராளமான பணிவாய்ப்புகள் ஃபிசியோதெரபி பயின்றவர்களுக்குக் காத்திருக்கின்றன.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் சுவாமி விவேகானந்தர் மறுவாழ்வுப் பயிற்சி மற்றும் ஆய்வுக்கான தேசிய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் துணை நிறுவனங்கள் சென்னை மற்றும் கொல்கத்தாவில் செயல்படுகின்றன. மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனங்களில் ஃபிசியோதெரபிக்கான இளநிலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கையானது, நுழைவுத் தேர்வுகள் வாயிலாக நடைபெறுகின்றது.
3 வகை படிப்புகள்
இந்த நிறுவனங்களில் ஃபிசியோதெரபி தொடர்பான 3 வகை இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. Bachelor of Physiotherapy-BPT, Bachelor of Occupational
Therapy-BOT, Bachelor of Prosthetics and Orthotics–BPO ஆகிய நான்கரை ஆண்டுக் கால படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இதே நிறுவனங்களில் தொடர்ந்து பல்வேறு முதுநிலை படிப்புகளை பயிலவும் வாய்ப்புண்டு.
தேவையான தகுதி
ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகிய பாடங்களுடன் பிளஸ் 2 முடித்தவர்கள் ஃபிசியோதெரபிக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் 40 சதவீத மதிப்பெண்களையும் மற்றவர்கள் 50 சதவீத மதிப்பெண்களையும் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி அடைந்திருப்பது அவசியம்.
சேர்க்கைக்கான அதிகபட்ச வயது வரம்பு 20. இதுவே எஸ்.சி./எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 ஆகும். விண்ணப்பக் கட்டணம் எஸ்.சி./எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.500/-; மற்றவர்களுக்கு ரூ.600/- ஆகும். மாற்றுத் திறனாளிகளுக்கு உடல் தகுதி தேர்வு தனியாக நடைபெறும். அவர்களின் உடல் தகுதி மற்றும் மாற்றுத் திறனாளி என்பதை உறுதி செய்யும் பரிசோதனைகள் இதில் மேற்கொள்ளப்படும்
தேர்வில் என்ன கேட்கப்படும்?
நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சுவாமி விவேகானந்தர் மறுவாழ்வுப் பயிற்சி மற்றும் ஆய்வுக்கான தேசிய நிறுவனத்தின் இணையப் பக்கத்தை அணுகலாம். அங்கு உரிய விவரங்களை பதிவு செய்து விண்ணப்ப நடைமுறைகளை மேற்கொள்ளலாம். சென்னை உட்பட சுமார் 20 இடங்களில் நுழைவுத் தேர்வுக்கான மையங்கள் செயல்படும். விண்ணப்ப நடைமுறைகள் வழக்கமாக மே மாதத்தில் அமையும். ஜூன் 23 அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வின் முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியாகும்.
2 மணி நேர நுழைவுத் தேர்வு இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதல் பகுதியில் General Ability and General Knowledge தொடர்பாக 10 மதிப்பெண்களுக்கு அமைந்திருக்கும். அடுத்த பகுதி இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) என தலா 30 மதிப்பெண்களுக்கானது. 100 கொள்குறி வகை வினாக்களில் வினாத்தாள் அமைந்திருக்கும். நுழைவுத்தேர்வில் உயிரியலுக்கு பதிலாக கணிதத்தை தேர்வு செய்துகொள்ளும் வசதிஉண்டு. பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்துடன் பொது அறிவுத் திறனையும் வளர்த்துக்கொண்டால் நுழைவுத் தேர்வுக்கு எளிதில் தயாராகலாம்.
சேர்க்கைக்கான வயது வரம்பு
பொதுப் பிரிவு -20, எஸ்.சி./எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளி - 25
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவு - ரூ.600/-, எஸ்.சி./எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளி - ரூ.500/-
விண்ணப்பிக்க: svnirtar.nic.in/
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago