வேதியியலின் 3 உட்பிரிவுகளிலும் முறையாகத் திட்டமிட்டு, பாடங்களைபுரிந்து படிப்பதன் மூலம் முழு மதிப்பெண்களை உறுதிசெய்ய முடியும்.
வினாத்தாள் அமைப்பு
பகுதி-1: ஒரு மதிப்பெண் பகுதியில் 15வினாக்கள் இடம்பெறுகின்றன. இவை புத்தகவினாக்கள் மற்றும் உள்ளிருந்து கேட்கப்படும் உயர்சிந்தனை வினாக்களின் கலவையாக இருக்கும்.
பகுதி-2: இரு மதிப்பெண் பகுதியில் கொடுக்கப்பட்ட 9 சிறு வினாக்களில் இருந்து 6-க்கு பதிலளிப்பதாக உள்ளது. இதில் ஒன்று கட்டாய வினாவாகும்.
பகுதி-3: குறுவினாக்கள் அடங்கிய 3 மதிப்பெண் பகுதியும் அதே போன்ற வினா எண்ணிக்கையுடன், ஒரு கட்டாய வினாவை உள்ளடக்கி அமைந்திருக்கும்.
பகுதி-4: ஐந்து மதிப்பெண்களுக்கான இப்பகுதியில் ‘அல்லது’ வகையிலான 5 வினாக்கள் இடம்பெறும்.
தேர்ச்சி நிச்சயம்
ஒரு மதிப்பெண் பகுதியில் 7 அல்லது 8 வினாக்கள் புத்தகத்தின் தன்மதிப்பீடு பகுதியில் இருந்தே கேட்கப்படுகிறது. 2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிகளில், கனிம, கரிம மற்றும் இயற்பியல் வேதியியலில் இருந்து தலா 3 வினாக்கள் கேட்கப்படுகின்றன.
கரிம வேதியியலை கடினமாகக் கருதும் மாணவர்கள், கனிம வேதியியல் மற்றும் இயற்பியல் வேதியியலை முழுமையாகப் படித்தால் போதும். கரிம வேதியியலின் வினாக்களை சாய்ஸில் விலக்கியும் முழு மதிப்பெண்களை உறுதி செய்யலாம்.
5 மதிப்பெண் பகுதியின் கணிசமானவினாக்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுமற்றும் குறு வினாக்களின் தொகுப்பாகவேஇடம்பெறுகிறது.
எனவே 2 மற்றும் 3 வினாக்களை கூடுதல்கவனத்துடன் படித்தால், அவை 5 மதிப்பெண் பகுதிக்கும் உதவும்.
இவ்வாறு, 1,2,3 மதிப்பெண்களை படித்தே மொத்த மதிப்பெண்ணான 70-க்கு 45 மதிப்பெண்கள் வரை உறுதி செய்யலாம்.
அதிக மதிப்பெண்களுக்கு
ஒரு மதிப்பெண் பகுதியின் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள், மதிப்பெண் இழப்புக்குக் காரணமாகின்றன. எனவே புத்தகவினாக்களுடன் பாடங்களை முழுமையாக வாசிப்பதும், முக்கியமான கருத்துக்களை குறிப்பெடுத்து தொகுத்துப் படிப்பதும் நல்லது.
2 மதிப்பெண் பகுதியில், ‘என்றால் என்ன?’வகை வினாக்கள், வரையறைகள், விதிகள், கொள்கைகள், தத்துவங்கள் உள்ளிட்டவை அதிகம் இடம்பெறும். கரிம வேதியியலில் கரிமசேர்மங்கள் தயாரிப்பு, பயன்கள் ஆகியவை முக்கியம்.
3 மதிப்பெண் பகுதியில் ஒப்பீடு வினாக்கள்,கணக்கீடுகள், தொடர்புகள், ஆகியவையும், கரிம வேதியியலில் இருந்து பெயர்ப்பு வினைகளும் கேட்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
5 மதிப்பெண் பகுதியில் கேட்கப்படும், ஒற்றை5 மதிப்பெண் வினாக்களுக்கும், ‘உலோகங்களை தாதிலிருந்து பிரித்தெடுத்தல், கருதுகோள்கள், கொள்கைகள், வேறுபாடுகள், வகைப்படுத்துதல்’ போன்றவற்றிலும் இருந்து தயாராக வேண்டும்.
கரிம வேதியியல்: உயர் மதிப்பெண் பெறவிரும்பும் மாணவர்கள், கரிம வேதியியல் பாடங்களையும் தவிர்க்காமல் படிப்பது அவசியம். கரிம வேதியியலின் ‘பெயர்ப்பு வினைகள், வேறுபடுத்துக, வினைகளுக்கான சோதனைகள், வினை வழிமுறைகள், அமைப்பை வருவித்தல், பயன்பாடுகள்’ ஆகியதலைப்பிலான வினாக்கள் முக்கியமானவை. இவற்றுடன் முக்கியமான கரிம வேதி வினைகளையும் தொகுத்துப் படிப்பது அவசியம்.
வி.எண்.38-ன்‘அல்லது’ வினா, கரிமவேதியியலின் கணக்கீடு வடிவில் கேட்கப்படும். இதற்கு அனைத்து சேர்மங்களின் பெயர்களுடன் அதன் வினைகளையும் எடுத்து எழுதுவது அவசியம்.
கனிம வேதியியலில் சமன்பாடுகள் முறையாகச் சமன் செய்யப்படுவது அவசியம். சமன்பாட்டின் மேல்பகுதியில் வெப்ப நிலை, அழுத்தம், வினைவேக மாற்றி போன்ற புறக்காரணிகளை முறையாக குறித்தாக வேண்டும்.
இயற்பியல் வேதியியலில் ‘சமன்பாடுகளை வருவித்தல், கருதுகோள்கள், கோட்பாடுகள், இயற்பியல் நிலைப்பாடுகள்’ ஆகியவை அடிப்படையிலான கணக்குகள் முக்கியமானவை.
கூடுதல் கவனக் குறிப்புகள்
விடையுடன் உரிய ‘அலகு’ எழுதுவதன் மூலம் அதற்கான மதிப்பெண்ணை உறுதி செய்யலாம். 3 மதிப்பெண் பகுதியில் எடுத்துக்காட்டுகள் அவசியமெனில் அவற்றை எடுத்து எழுதுவதும் அவசியம்.
பாடங்களை படிக்கும்போதும், திருப்புதலின் போதும், வினாக்களின் தன்மையை மாற்றி யோசித்து தயாராவதில் பழக வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘ஹெய்சன் பர்க்கின் நிலையில்லா கோட்பாடு என்றால் என்ன?’ என்ற வினாவை, ‘நுண்ணிய துகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலை கொள்வதில்லை என்பதை விளக்கும் விதி/கொள்கையைத்தருக’ என்றும் மாற்றி கேட்கலாம். இரண்டுக்கும் பதில் ஒன்றே!. எனவே வினா - விடையாக படிக்கும் பழக்கத்தைவிட, விடைக்குரிய வினாக்களை அடையாளம் கண்டு திருப்புதல் செய்வது, மாற்றி கேட்கப்படும் வினாக்களுக்கு பதில் எழுத உறுதுணையாகும்.
‘விதிகள், கூற்றுகள், வரையறைகள்’ ஆகியவற்றை எழுதுகையில் புத்தகத்தின் கருத்துக்கள் மாறாது அப்படியே எழுத வேண்டும். இந்த விடையளிப்புகளில் எடுத்துக்காட்டுகள், தேவையான சமன்பாடுகள், கணிதவியல் கோட்பாடுகளையும் எழுதினால் மட்டுமே 3 மதிப்பெண் பகுதி வினாக்களில் முழு மதிப்பெண் கிடைக்கும். சமன்பாடுகளை குறிப்பிடும்போது, அவற்றை உரிய முறையில் சமன் செய்வதுடன் அதிலுள்ள முக்கிய மூலக்கூறுகள் அல்லது சேர்மங்களின் பெயர்களை எழுதுவதும் அவசியம்.
ஒரே மாதிரியான பெயர்கள் இடம்பெறும் வினாக்களைக் கூடுதலாக ஓரிரு முறை வாசித்த பிறகே உரிய விடையை எழுத வேண்டும். சமன்பாடு மற்றும் வருவித்தல் வினாக்களில் அடுத்தடுத்த இரு சமன்பாடுகளுக்கு இடையிலான விளக்கச் சொற் களையும் எழுதுவது முழு மதிப்பெண்ணுக்கு உதவும். சமன்பாடுகளை எழுதும் போது அம்புக் குறியின் மேல் குறிப்பிட்டாக வேண்டியவெப்பநிலை, அழுத்தம் மற்றும் வினை காரணிகளை மறக்காது எழுதுவது அவசியம்.
நேர மேலாண்மை
ஒரு மதிப்பெண் பகுதிக்கு 30 நிமிடங்கள், 2 மதிப்பெண் பகுதிக்கு 24 நிமிடங்கள், 3 மதிப்பெண் பகுதிக்கு 36 நிமிடங்கள், 5 மதிப்பெண் பகுதிக்கு 60 நிமிடங்கள் என நேரத்தைப் பிரித்து ஒதுக்கி தேர்வெழுதலாம். மீதமிருப்பதில் 20 நிமிடங்களேனும் விடைத்தாளைச் சரிபார்க்க ஒதுக்குவது நல்லது.
- பாடக் குறிப்புகளை வழங்கியவர்:
ஞா.ஸ்டாலின்,
முதுகலை ஆசிரியர் (வேதியியல்),
அரசு மேல்நிலைப்பள்ளி, விளவன்கோடு, கன்னியாகுமரி மாவட்டம். தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago