ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
மலையும் மலையை சார்ந்தவைகளிலும் உங்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தால் மலையேற்றத்தை வாழ்க்கையாக நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். மலையேற்றம் ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல அது ஒரு தொழிலும் கூட. எப்படி தொழில்முறையாக மலையேற்றத்தை முன்னெடுப்பது? எங்கே மலையேற்றத்தைக் கற்றுக்கொள்வது? இந்திய மலையேற்றஅமைப்பு (Indian Mountaineering Foundation)தேசிய அளவில் மலையேற்றப் பயிற்சிகளைகண்காணிக்கிறது. இந்த அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட நான்குபயிற்சி நிலையங்கள் இந்தியாவில் உள்ளன.
மலையேற்றப் பயிற்சி நிலையங்கள்உத்திரகாண்டின் உத்தர்காஷி பகுதியில் உள்ள நேரு மலையேற்ற நிறுவனம், மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் அமைந்துள்ள ஹிமாலய மலையேற்ற நிறுவனம், ஹிமாசலபிரதேசத்தின் மணாலியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாயி மலையேற்றம் மற்றும் உடன் விளையாட்டுகள் நிறுவனம்,ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாஹல்காம் பகுதியில் உள்ள ஜவஹர்மலையேற்ற நிறுவனம் ஆகியவற்றில் மலையேற்ற பயிற்சி பெறலாம். இவை தவிர பிற மலையேற்ற பயிற்சி நிறுவனங்களும் உண்டு.
மலையேற்றப் படிப்புகள்நான்கு விதமான மலையேற்றப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அடிப்படை மலையேற்றப் படிப்பு (Basic Mountaineering Course-BMC), மேம்பட்ட மலையேற்றப் படிப்பு (Advanced Mountaineering Course-AMC), தேடுதல்-மீட்பு படிப்பு (Search And Rescue-SAR), மற்றும் கற்பித்தல் முறை (Method of Instruction-MOI) ஆகிய படிப்புகள் உண்டு.
அடிப்படை படிப்புக்கு பிறகு மேம்பட்ட படிப்பில் சேரலாம். இரண்டு படிப்புகளுக்கும் 28 நாட்கள் பயிற்சியளிக்கப்படும். அடிப்படை படிப்பிற்குக் குறைந்தபட்ச வயது 16, மேம்பட்ட படிப்பில் 18 வயதானவர்கள் சேரலாம். மேம்பட்ட படிப்பை முடித்தவர்கள் மற்ற இரண்டு படிப்புகளில் ஏதேனும்ஒன்றில் சேரலாம். கற்பித்தல் முறைபடிப்பைப் படித்தவர்கள் மற்றவர்களுக்குமலையேற்ற பயிற்சியளிக்கலாம்.
வேலைவாய்ப்புதேசிய, சர்வதேச மலையேற்ற சாகசங்களில் பங்கேற்கலாம். மலையேற்றம் ஒரு விளையாட்டாக ஒலிம்பிக் போட்டிகளில் தற்போது சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதில் பங்கேற்று பதக்கம் வெல்லலாம். இப்படி தேசிய-சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் விளையாட்டு ஒதுக்கீட்டில் மத்திய மாநில அரசுப் பணிகளில் சேரலாம். மலையேற்ற வீரர்களின் பயிற்சியாளராக விளையாட்டு ஆணையத்தில் பணியாற்றி சர்வதேச போட்டிகளுக்கு அவர்களைத் தயார் செய்யலாம்.
மலையேற்ற வழிகாட்டியாக சுற்றுலாத்துறையிலும் சாகச மையங்களிலும் சொகுசு விடுதிகளிலும் பணியாற்றலாம். மலையேற்ற பயிற்சியாளராக, பயிற்சிப் பள்ளிகளிலும் பொழுதுபோக்கு பூங்காக்களிலும் பணியாற்றலாம்.
(மேலும் விவரங்களுக்கு https://www.indmount.org/IMF/course)
(தொடரும்)
கட்டுரையாளர், இயக்குனர்-தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago