உயர்கல்விக்கு திறவுகோல் 5: கடல்சார் பொறியாளர் ஆகலாம்!

By செய்திப்பிரிவு

எஸ்.எஸ்.லெனின்

போக்குவரத்து, வணிகம், சுற்றுலா, கட்டுமானம், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு என கடல் போன்றே பரந்த வேலைவாய்ப்புகளை கொண்டிருப்பவை கடல்சார் படிப்புகள். சவால்கள் நிறைந்த பணிச்சூழல், கடல் மார்க்கமாய் உலகம் சுற்றும் வாய்ப்பு, அதிக ஊதியம் என கடல்சார் பணிகளில் சுவாரசியத்துக்குக் குறைவில்லை. பல்வேறு கடல்சார் பொறியியல் படிப்புகளில் சேர IMU CET (Indian Maritime University - Common Entrance Test) என்ற பொது நுழைவுத் தேர்வு உதவுகிறது.

ஒரே குடையின் கீழ்

மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னையில் செயல்பட்டு வருகிறது. மரைன் இன்ஜினீயரிங் உட்பட பல பி.டெக்.,/பி.இ., பட்டங்களை இந்த பல்கலைக்கழகம் பயிற்றுவிக்கிறது. இவற்றை தவிரவும் கப்பல் போக்குவரத்து மற்றும் மின் வணிகம் தொடர்பான பி.பி.ஏ. படிப்பு, கப்பல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தொடர்பான இளங்கலை அறிவியல் பட்டம், கடல்சார் எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.எஸ்சி. ஆகிய முதுநிலை படிப்புகளையும் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

பல்கலைக்கழகத்தின் கல்வி நிறுவனங்கள் மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினம் என 7 துறைமுக நகரங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் 22 இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

இதர பொறியியல் படிப்பை விட கடல்சார்படிப்புகளுக்கு கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை செலவாகும். உடனடி வேலைவாய்ப்பு மற்றும் ஆரம்ப நிலை ஊதியமே ரூ.1 லட்சத்தை தொடும் என்பதால், கடல்சார் பொறியியல் படிப்புகளின் கல்விக்கடனுக்கு வங்கிகள் முன்னுரிமை தருகின்றன.

விண்ணப்பிக்கத் தகுதி

இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்தது 60 சதவீதமும், ஆங்கிலத்தில் குறைந்தது 50 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ஆங்கிலம் தவிர்த்த இதரப் பாடங்களில் 5 சதவீத சலுகை உண்டு. 18 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுகிறார்கள். அதிகபட்ச வயது வரம்பு 26 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இதில் 5 ஆண்டு சலுகை உண்டு.

விண்ணப்ப நடைமுறைகள்

விண்ணப்ப நடைமுறைகள் ஏப்ரல்முதல் வாரத்தில் தொடங்கும். கடல்சார்பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் முறையாக பதிவு செய்து, ஆன்லைன்விண்ணப்பம் மற்றும் கட்டண பரிவர்த்தனைகளைச் செய்யலாம். விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் உள்ளிட்டஆவண நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.1000 மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.700 ஆகும். ஜூன் முதல் வாரத்தில் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு, அதற்கு அடுத்த வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

என்ன கேள்விகள்?

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்தும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். தேர்வு கால அவகாசம் 3 மணி நேரம். இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகியவற்றுடன் பொது அறிவு தொடர்பானவை என 200 வினாக்கள் கொள்குறிவகையில் (மல்டிபிள் சாய்ஸ்) அமைந்திருக்கும். 10-ம் வகுப்பில் தொடங்கி, பிளஸ் 2 வரையிலான பாடங்களில் இருந்தே பெரும்பாலான வினாக்கள் கேட்கப்படும். தற்போது இந்த வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் விருப்பமுள்ளோர், கூடுதலாக சற்று நேரம் ஒதுக்கி மரைன் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கும் தயாராகிவரலாம். தேர்வில் தவறான விடைகளுக்குநெகட்டிவ் மதிப்பெண் முறை கிடையாது. தேர்வு மையங்கள் தமிழகத்தின் சென்னை,கோவை, மதுரை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்திருக்கும்.

கடல்சார் பணிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு: IMU-CET
கடல்சார் பல்கலைக்கழக இணையதள முகவரி: imu.edu.in/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்